இறக்காமம் பிரதேச செயலக பிரிவில் தெரிவு செய்யப்பட்ட பாலர் பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலை உபகரங்கள் வழங்கி வைப்பு

இறக்காமம் பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட தெரிவு செய்யப்பட்ட வருமானம் குறைந்த  முன்பள்ளிப் பாலர் பாடசாலை மாணவர்களுக்கு பெண்கள் மற்றும் சிறுவர் அபிவிருத்திப் பிரிவினால் பாடசாலை உபகரணங்கள் வழங்கிவைக்கும் நிகழ்வு முன்பிள்ளைப் பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆர்.எம். இம்டாடின் ஏற்பாட்டில் இன்று செவ்வாய் கிழமை இமாம் இப்னு ஹஜர் பாலர் பாடசாலையில் இடம்பெற்றது.
 
இந்நிகழ்விற்கு சது/இற/ அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலையின் அதிபர் ஏ.ஹாறுடீன், பாடசாலை ஆரம்ப பிரிவு பொறுப்பாசியை பரீனா ஹாறூன், உளவளத்துணை உத்தியோகத்தர் ஏ.எச். றகீப், சிறுவர் உரிமைகள் மேம்பாட்டு உத்தியோகத்தர் எஸ். சபறுல் ஹஷீனா, பெண்கள் அபிவிருத்தி வெளிக்கள உத்தியோகத்தர் எஸ். றிஸ்மியா ஜஹான் ஆகியோர் கலந்து கொண்டதோடு கொரோனாவிற்கு பின்னரான மாணவர்களின் உள ஆரோக்கியத்தை கட்டியெழுப்புவதில் பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் வகிபாகம் தொடர்பில் ஆலோசனையும் வழிகாட்டல்களையும் வழங்கிவைத்தனர்.
 
பிந்தங்கிய கிராமங்களில் உள்ள மாணவர்களின் முன்பள்ளி பாடசாலைக் கல்வியை உறுதிப்படுத்தும் நோக்கில் பிரதேச செயலக பெண்கள் மற்றும் சிறுவர் அபிவிருத்தி பிரிவினால் இவ்வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறன்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts