இறுதிக்கட்ட யுத்தத்தில் அரசாங்கத்திடம் சரணடைந்த போராளிகளையும் அரசியல் கைதிகளையும் மஹிந்த அரசாங்கமே விடுதலை செய்தது

இறுதிக்கட்ட யுத்தத்தில் அரசாங்கத்திடம் சரணடைந்த போராளிகளையும் அரசியல் கைதிகளையும் மஹிந்த  அரசாங்கமே விடுதலை செய்தது என்கின்றார் வலிந்து காணாமலாக்கப்பட்டோர் சங்கத்தின் தலைவி தம்பிராசா செல்வராணி
(டினேஸ்)
சம காலத்தில் நிலவிவரும் அரசியல் மாற்றம் தொடர்பான இன்று 02 வலிந்து காணாமலாக்கப்பட்டோர் சங்க காரியாலயத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.
இவ்விடயம் தொடர்பாக மேலும் கூறுகையில்
கடந்த 2009 ஆண்டு நடைபெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தின் போது பத்தாயிரத்திற்கு மேற்பட்ட போராளிகள் அரச தரப்பினரிடமே சரணடைந்தனர் அவர்களை எதுவித நிபந்தனைகளுமின்றி அன்றைய காலத்திலிருந்த மஹிந்த அரசாங்கமே விடுத்து  சமூகமயப்படுத்தியது.
ஆனால் தற்போது நடைபெற்றக்கொண்டிருக்கும் நல்லாட்சி என்கின்ற இந்த மைத்திரிபால சிறிசேன அவர்களது அரசாங்கம் அரசியல் கைதுகளையும் விடுவிப்பதற்கு மிகவும் திண்டாடுகின்றார் அந்தவகையில் எங்களது பிரச்சனைகளை மட்டுமல்ல அரசியல் கைதுகளின் சாகும்வரையிலான உண்ணாவிரதம் இருந்தும் அவர்களது விடுதலையில் கவணம் செலுத்தவில்லை.
கடந்த அரசாங்கத்திடமே எனது கணவரை ஒப்படைத்தேன் அன்று ஜனாதிபதியாகவிருந்த மஹிந்த ராஜபக்ச அவர்களே இன்று பிரதமராக பதவி ஏற்றுள்ளார் அவரிடமும் சென்று கேட்கவுள்ளோம் உங்களது பதவிக்காலத்தில் எமது பிள்ளைகளையும் கணவன்மார்களையும் கையளித்தோம் அவர்களை மீட்டுத்தரும்படி கேட்கவுள்ளோம்.
அத்துடன் இன்று புதிய பிரதமரை எதிர்கட்சித்தலைவர் சம்மந்தன் ஐயா சந்தித்திருக்கின்றார் மறுகணம் சுமந்திரன் அவர்கள் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து இரகசிய பேச்சுக்கள் நடைபெற்றிருக்கின்றன ஆனால் அவர்கள் யாருக்காக பேசியிருக்கிறனர் மக்களுக்காக பேசியிருந்தார் அதனை வெளிப்படுத்த வேண்டும் இல்லையேன் எமது பிரச்சினைகளை எம்மிடம் கேட்டு அவர்களுடன் பேசவேண்டும்.
எனவே புதிதாக பதவியேற்றுள்ள பிரதமர் எமது தமிழ்மக்களது பிரச்சனைகளை விரைவில் தீர்த்து வைக்கவேண்டும் இல்லையெனில் எமது போராட்டம்
தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என கூறிக்கொள்கின்றேன் என வலிந்து காணாமலாக்கப்பட்டோர் சங்கத்தின் தலைவி தம்பிராசா செல்வராணி கருத்துத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts