இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் தெரிவு

 

திருகோணமலை உவர்மலை விவேகானந்தா கல்லூரியில் 22.06.2018 அன்று நடைபெற்ற இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கத்தின் பிரதிநிதிகள் பொதுச்சபைக்கூட்டத்தில் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் தெரிவுசெய்யப்பட்டனர்.அதன்படி….சங்கத்தின் தலைவராக திரு.க.நல்லதம்பி, (மட்டக்களப்பு கல்வி வலயம்) பொதுச் செயலாளராக திரு.சரா.புவனேஸ்வரன், (யாழ்ப்பாணம் கல்வி வலயம்)  நிதிச் செயலாளராக திரு.க.தேவநேசன், (தென்மராட்சி கல்வி வலயம்)  நிர்வாகச் செயலாளராக திரு.கு.அருணாசலம், (கல்குடா கல்வி வலயம்)  கல்வி கலாசார செயலாளராக திரு.நா.காளிராசா(கிண்ணியா கல்வி வலயம்)  பத்திரிகைச் செயலாளராக திரு.சு.உதயகுமார், (வவுனியா கல்வி வலயம்)  பிரசாரசெயலாளராக திரு.ஏ.மடுத்தீன், (மன்னார் கல்வி வலயம்)  துணைத் தலைவர்களாக (ஆண்கள்) திரு.கோ.செல்வநாயகம், (திருகோணமலை கல்வி வலயம்)  திரு.சொ.லோகேஸ்வரன், (யாழ்ப்பாணம் கல்வி வலயம்)  துணைத்தலைவர்கள் (பெண்கள்) திருமதி.சரஸ்வதி பாலசுப்ரமணியம், (பண்டாரவளை கல்வி வலயம்)  திருமதி.வசந்தா குமாரசாமி, (மட்டக்களப்பு கல்வி வலயம்)  துணைப்பொதுச் செயலாளர்களாக திரு.சி.சசிதரன், (பட்டிருப்பு கல்வி வலயம்)  திரு.சி.கணேசலிங்கம், (யாழ்ப்பாணம் கல்வி வலயம்)  துணைப்பொதுச் செயலாளர்(பெண்) திருமதி.சுஜந்தினிதேவி யுவராஜா, (திருகோணமலை கல்வி வலயம்)  துணைநிதிச்செயலாளராக (ஆண்) திரு.கி.இந்திரன், (வடமராட்சி கல்வி வலயம்)  துணைநிதிச்செயலாளராக (பெண்) செல்வி.வளர்மதி சங்கரலிங்கம்(வலிகாமம் கல்வி வலயம்)  ஆகியோரோடு வடக்கு மாகாணச் செயலாளராக திரு.ஜெ.நிசாகர், (கிளிநொச்சி கல்வி வலயம்)  கிழக்கு மாகாணச் செயலாளராக திரு.இரா.சச்சிதானந்தம்(மூதூர் கல்வி வலயம்)  ஆகியோரும் ஏகமனதாகத் தெரிவு செய்யப்பட்டனர்.

இவர்களோடு மாவட்டங்களின் தலைவர்களும், மாவட்டங்களின் செயலாளர்களும் தெரிவுசெய்யப்பட்டனர். அவர்களின் விபரங்கள் பின்னர் அறியத்தரப்படும்.

சங்கத்தின் ஆலோசகர்களாக திரு.த.மகாசிவம் அவர்களும், திரு.ஈ.ஜெ.மகேந்திரா அவர்களும் ஏகமனதாகத் தெரிவுசெய்யப்பட்டனர்.

 

Related posts