சிரேஸ்ட ஊடகவியலாளருமான சம்சுதீன் அரூஸ் பொலிஸில் முறைப்பாடு

எம்மை அச்சுறுத்துவதன் மூலம் நியாயமான கருத்துக்களை நசுக்க முற்படுகின்றனர் என தேசிய ஐக்கிய ஊடகவியாளர் ஒன்றியத்தின் (நுஜா) தலைவரும் சிரேஸ்ட ஊடகவியலாளருமான சம்சுதீன் அரூஸ் குறிப்பிட்டுள்ளார்.கையடக்கத் தொலைபேசியுடாக தனக்கு விடுக்கப்பட்ட  அச்சுறுத்தல் தொடர்பாக அக்கறைப்பற்று பொலிஸ் நிலையத்திற்கு (22) மாலை முறைப்பாடு செய்த பின்னர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தனது கருத்தில்
சில அரசியல் வாதிகள் மற்றும் அவர்களின்  அடிவருடிகள் சிலரின் இவ்வாறான கீழ்த்தரனமான   வேலையினால் ஊடகவியலாளர்களாகிய நாம் பெரும் அச்சுறுத்தல்களை எதிர்கொண்டுள்ளோம்.இன்று எனக்கு இவ்வாறான மிரட்டல் அழைப்புகள் வரும்.நாளை மற்றுமொரு ஊடகவியலாளருக்கு வரும்.இதனை தடுக்காமல் விட்டால் ஊடக சுதந்திரம் பலத்த சவாலுக்கு உட்படும்.தொடர்ச்சியாக எமது பிரதேசங்களில் ஊடகவியலாளர்களுக்கு சுயாதீனமாக இயங்க முடியாதுள்ளது.இதற்கு காரணம் அரசியல் வாதிகளின் போக்கிரித்தனமும் அவர்களின் அருவருடிகளின் கீழ்த்தனமாக நடவடிக்கைகளுமாகும்.
மக்களின் தேவைகளை அறிந்து அதற்காக எமது உயிரையும் துச்சமென மதித்து ஊடக துறையில் எழுதி வருகின்றோம்.ஆனால் ஊழல் செய்கின்ற பலருக்கு எமது எழுத்தாயுதம் பெரும் அச்சுறுத்தலாக இருப்பதனால் சம்பந்தப்பட்ட அவர்கள் எம்மை(ஊடகவியலாளர்களை) பல வழிகளில் அச்சுறுத்தி அடிபணிய வைக்க முயல்கின்றனர்.இதனை கைகட்டி பார்த்திருக்க முடியாது.எனக்கு அச்சுறுத்தல் விடுத்த தொலைபேசி இலக்கம் சந்தேக நபர் தொடர்பிலான அனைத்து தகவல்களையும் சம்பந்தப்பட்ட தரப்புகள் மற்றும்  பொலிஸ் மா அதிபருக்கும்  அறிவித்துள்ளேன்.
எனவே  நமது மண்ணில் ஊடகத்திற்கு எதிரான  அராஜகம் தலைதூக்குவதை தடுக்க அனைவரும் முன்வர வேண்டும் என வேண்டுகோள் விடுக்கின்றேன். ஊடகவியலாளர்களையும் அடக்கி தாக்க முயற்சிக்கின்றனர். இதனை விட்டுவிடக்கூடாது. நாளை இன்னுமொருவர் பாதிக்கப்படலாம். மேலும்  ஊடகவியலாளர் பைசல் இஸ்மாயிலுக்கும் பாரிய அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதும் நாம் அறிந்த விடயமாகும் என மேலும் குறிப்பிட்டார்.

Related posts