சுற்றுலா விசா மூலம் இலங்கைக்கு வந்து விசா நிபந்தனைகளை மீறி தடெல்ல பிரதேசத்தில் கட்டட நிர்மாணப் பணிகளில் ஈடுபட்டிருந்த 14 சீனப் பிரஜைகள் நேற்றைய தினம் காலி பொலிஸ் பிரிவின் ஊழல் ஒழிப்பு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸாருக்குக் கிடைத்த தகவலக்கமைய குறித்த இடத்தை சுற்றிவளைத்த போதே கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டிருந்த இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கைதுசெய்யப்பட்ட 14 பேரும் 20,30, 50 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என்றும் விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.
இவர்கள் ஜனவரி மாதம் முதலாம் திகதியிலிருந்து மார்ச் மாதம் முதலாம் திகதி வரை இந்நாட்டில் தங்கியிருப்பதற்கான விசாவைப் பெற்றுள்ளனர்.
குடிவரவு- குடியகல்வு சட்டத்தின் கீழ் சுற்றுலா விசாவைப் பெற்று, சுற்றுலா நிபந்தனைகளை மீறி இந்நாட்டில் தொழில் புரிந்தமை சட்டவிரோதமானதெனவும் தெரிவித்துள்ள பொலிஸார் கைதுசெய்யப்பட்டுள்ள சீனப் பிரஜைகளை நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.