இவ்வருடம் கல்விப் பொதுத் தராதரப்பத்திர உயர்தரப் பரீட்சை அனுமதிக்கான விண்ணப்பங்கள் நாளை முதல் இணையத்தளம் ஊடாக (online) மாத்திரம் ஏற்றுக்கொள்ளப்படவுள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
அதற்கமைய, பாடசாலை மூலப் பரீட்சார்த்திகள் மற்றும் தனியார் பரீட்சார்த்திகள் அனைவரும் தமது விண்ணப்பப்படிவங்களை நாளை முதல் எதிர்வரும் 30 ஆம்திகதி வரை இணையவழியாக சமர்ப்பிக்க முடியும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை,நூற்றுக்கும் குறைவான மாணவர்கள் கொண்ட பாடசாலைகளை இந்த மாதத்திற்குள் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அமைச்சர் குறிப்பிட்டார்.
எனினும் அதற்கான சுகாதார வழிக்காட்டல்கள் தயாரித்து அதன் உரிய முறையில் செயற்படுத்த வாய்ப்புகள் உள்ளதாக என உறுதி செய்த பின்னரே அவ்வாறு பாடசாலைகளை திறக்க முடியும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.