கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சைகள் தற்சமயம் நாடளாவிய ரீதியாக இடம்பெற்று வருகின்றது.
இந்தநிலையில் பரீட்சையின் நேர அட்டவணை தொடர்பில் ஏதேனும் முறைப்பாடுகள் இருப்பின் அது குறித்து தெளிவைப்பெற விசேட தொலைபேசி இலக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அதன்படி, 011 2 78 42 08 அல்லது 011 2 78 45 37 என்ற தொலைபேசி இலக்கங்களுக்கோ அல்லது 1911 என்ற அவரச இலக்கத்திற்கோ அழைத்து அது தொடர்பான தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும் என பிரதி பரீட்சைகள் ஆணையாளர் தெரிவித்தார்.