ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நாடாளுமன்றத்தைக் கலைத்தமை சட்டவிரோதமானது என்றும் இதற்கு எதிராக, உயர்நீதிமன்றத்தை நாடவுள்ளதாகவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக, இன்று கருத்துத் தெரிவித்த அவர்,
நாட்டின் அரசமைப்பில், நாடாளுமன்றம் தொடர்பான சட்டத்திட்டங்கள் தெளிவாக உள்ள நிலையில், நாடாளுமன்றம் கலைப்பட்டிருப்பதை, உயர்நீதிமன்றமும் தேர்தல் ஆணையகமும் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது என்று அவர் கூறியுள்ளார்.
ஜனாதிபதியினால் நாடாளுமன்றத்தைக் கலைக்க முடியாது என்றும் அதற்கு அதிகாரம் இல்லை என்பதை, 19ஆவது திருத்தச் சட்டம் தெளிவாகக் கூறுகின்றது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.