எருவில் கண்ணகி மகாவித்தியாலயத்தின் பழையமாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் பிரான்ஸ் நாட்டில் வசித்துக்கொண்டிருக்கின்ற ஊடகவியலாளர் ஆர் .தில்லைநாயகத்தின் அனுசரணையின் மூலம் எருவில் கண்ணகி மகாவித்தியாலயத்தில் கல்விகற்கும் வசதிகுறைந்த மாணவர்களுக்குக் கற்றல் உபகரணம் வழங்கிவைக்கும் நிகழ்வு அதிபர் சா.பரமானந்தம் தலைமையில் நடைபெற்றது
இந்நிகழ்வில் ஓய்வு பெற்ற திடீர் மரண விசாரணை அதிகாரி ச.பேரின்பநாயகம் அப்பாடசாலையின் பழையமாணவர் சங்கத்தின் செயலாளரும் ஆசிரியருமான ஆர்.ஜீவராஜ் ஊடகவியலாளர் தில்லைநாயகத்தின் பாரியார் சங்கீதா உட்பட பலர் கலந்து சிறப்பித்தனர்.