எஸ்.எம். சபீஸின் “அயலவருக்கு உதவுவோம்” திட்டம் :  பொதுமுடக்கத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணப்பொதி வழங்கும் நிகழ்வு !

“அயலவருக்கு உதவுவோம்” திட்டத்தின் கீழ் பொதுமுடக்கத்தில் வாழ்வாதாரத்தை இழந்த மக்களுக்கான நிவாரணப்பொதி வழங்கும் நிகழ்வு அல்- மீஸான் பௌண்டஷன், ஸ்ரீலங்காவின் ஏற்பாட்டில் நிந்தவூர், காரைதீவு, மாளிகைக்காடு, சாய்ந்தமருது பிரதேசத்தில் இன்று (29) இடம்பெற்றது.
 
அக்கரைப்பற்று மாநகரசபை உறுப்பினரும் அக்கரைப்பற்று ஜும்மாப்பள்ளிவாசல் தலைவருமான எஸ்.எம்.சபீஸின் அனுசரணையில் நடைபெற்ற இந்த நிவாரப்பணியில் நிந்தவூர் பிரதேச சபை, காரைதீவு பிரதேச சபை, கல்முனை மாநகரசபை பிரதேசங்களை சேர்ந்த சுமார் 280 குடும்பங்களுக்கான நிவாரணப்பொருட்கள் இதன்போது வழங்கி வைக்கப்பட்டது. அக்கரைப்பற்று மாநகரசபை உறுப்பினர் எஸ்.எம்.சபீஸின் அனுசரணையில் இறுதியாக அமுலுக்குவந்த பொதுமுடக்கத்தின் போது வாழ்வாதாரத்தை இழந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு “அயலவருக்கு உதவுவோம்” திட்டத்தின் கீழ் இந்நிவாராண உதவிகள் வழங்கிவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
 
“அயலவருக்கு உதவுவோம்” திட்டத்தின் கீழ் தமிழ், முஸ்லிம், கிறிஸ்தவ மக்களுக்கு இந்நிவாரணம் வழங்கிவைக்கும் நிகழ்வில் அக்கரைப்பற்று மாநகரசபை உறுப்பினரும் அக்கரைப்பற்று ஜும்மாப்பள்ளிவாசல் தலைவருமான எஸ்.எம்.சபீஸ், அல்- மீஸான் பௌண்டஷன், ஸ்ரீலங்காவின் தவிசாளர் யு.எல்.என். ஹுதா உமர், பிரதித்தலைவர் நாஸிக் பதுர்தீன், காரைதீவு பிரதேச ஒருங்கமைப்பாளர் மாகாதேவன் தனுசியன், கல்முனை பிரதேச ஒருங்கமைப்பாளரும், மாவட்ட ஊடக இணைப்பாளருமான எம்.என்.எம். அப்ராஸ், நிந்தவூர் பிரதேச ஒருங்கமைப்பாளர் எம். ஐசெக்தீன் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.  

Related posts