நூருல் ஹுதா உமர்
ஜனாதிபதியின் சுபீட்சத்தின் நோக்கு திட்டத்தின் கீழ் நாட்டில் உள்ள ஒரு இலட்சம் கிலோமீட்டர் வீதிகளை அபிவிருத்தி செய்யும் வேலைத்திட்டத்தின் படி 41 மில்லியன் ரூபா செலவில் ஒலுவில், பாலமுனை தொடக்கம் அட்டாளைச்சேனை வரையிலான கடற்கரை வீதிகளுக்கு காபட் இடும் வேலைத்திட்டம் திங்கட்கிழமை (28) பாராளுமன்ற உறுப்பினர் பைசால் காசிமினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
பாலமுனை பிரதேசத்தின் மின்ஹாஜ் வட்டாரத்தின் செயற்பாட்டாளர் எம்.ஏ.அபூபக்கரின் தலைமையில் நடைபெற்ற இன் நிகழ்வில் முன்னாள் மாகாண அமைச்சர் எம்.எஸ். உதுமாலெப்பை, அட்டாளைச்சேனை பிரதேச சபை தவிசாளர் ஏ.எல்.எம். அமானுல்லாஹ், பிரதேச சபை உப தவிசாளர் எஸ்.எம்.எம். ஹனிபா உட்பட மேலும் பல முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.