எஸ்.சபேசன்
முரண்பாடுகள், ஒத்த கருத்துகள், கருத்தொற்றுமை மனிதர்களுக்கு மட்டுமல்ல கடவுள்களிடமும் இருந்ததுதான் கடவுள் இடத்திலே முரண்பாடுகள் உள்ளபோது கட்சிகளிடையே முரண்பாடுகள் இல்லாமல் போகுமா என கூறினார் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கை தமிழரசு கட்சி ஊடக செயலாளரும், பட்டிருப்பு தொகுதி இலங்பை தமிழரசு கட்சி்தலைவருமான பா.அரியநேத்திரன்.
ஐநா மனித உரிமை ஆணையாளருக்கு தமிழ்தேசிய கூட்டமைப்பு ஒற்றுமையாக ஒரு கடிதம் அனுப்பவில்லை பலரும் வெவ்வேறு விதமாக கடிதங்களை அனுப்பியது உங்களிடம் கருத்தொற்றுமை இல்லை என்பதையே வெளிக்காட்டுகிறதே என ஊடகவியலாளர் கேட்டபோது மேலும் கருத்து கூறுகையில்.
சிவபெருமானும், உமாதேவியாரும் தமது பிள்ளைகளான பிள்ளையாரையும் , முருகப்பெருமானையும் அழைத்து முதலில் உலகை சுற்றிவருபவருக்கு மாம்பழம் பரிசாக தருகிறோம் என்றனர். அப்போது பிள்ளையார் சிவனையும் உமை அம்மையையும் சுற்றிவந்து தாயும் தந்தையுமே உலகம் என்றார் அவருக்கு மாம்பழம் பரிசாக கிடைத்தது.
ஆனால் முருகப்பெருமான் மயில்மீது ஏறிஅமர்ந்து ஊர் உலகம் வனந்தரம் எல்லாம் சுற்றி அதுவே உலகம் என்றார்.
இதில் பிள்ளையாரான தமையனுக்கும், முருகப்பெருமானான தம்பிக்கும் கருத்தொற்றுமையோ, செயல் ஒற்றுமையோ இருக்கவில்லை முரண்பாடான முடிவுகள் வெளிப்பட்டன இது கடவுளுக்கே ஒற்றுமையான ஒரு முடிவுகளை எடுக்கமுடியாது என்பதை வெளிக்காட்டுகிறது அல்லவா அப்படி எனில் எப்படி மனிதர்களுக்கு ஒற்றுமையாக ஒரு முடிவுக்கு வரமுடியும் என்பதை சிந்தியுங்கள்.
இது இன்று நேற்றல்ல தமிழ்தேசியகூட்டமைப்பு 2001,அக்டோபர் 20,மர திகதி உருவாக்கப்பட்டு 2001, டிசம்பர்,09 ம் திகதி இடம்பெற்ற முதலாவது தேர்தல் தமிழர் விடுதலை கூட்டணியின் உதயசூரியன் சின்னத்தில்தான் வடக்கு கிழக்கு மகாணத்தில் போட்டியிட்டு 18,ஆசனங்களை பெற்றது.
ஆனால் 2004,ஏப்ரல்,8,ல் இடம்பெற்ற இரண்டாவது தேர்தலில் தமிழர் விடுதலை கூட்டணி உதய சூரியன் சின்னத்தில் தமிழ்தேசிய கூட்டமைப்பு போட்டியிட வில்லை அல்லவா?
ஆனந்த சங்கரிஐயா தமது கட்சி தமிழர் விடுதலை கூட்டணிகட்சியையும் அதன் சின்னத்தையும் தர மறுத்து சென்றதால்தானே இலங்கை தமிழரசு கட்சியில் வீட்டுச்சின்னத்தில் அந்த தேர்தலில் போட்டியிட்டு 22,ஆசனங்களை பெற்றோம்.
தமிழ்தேசிய கூட்டமைப்பில் இருந்து முதலாவதாக பிரிந்து சென்ற வரலாறு தமிழர் விடுதலை கூட்டணி கட்சியின் செயலாளர் ஆனந்தசங்கரி ஐயாவையே சாரும்.அவர்தான் முதல் முதல் ஒற்றுமையை கெடுத்தவர் இந்த வரலாறு பலருக்கு தெரியாது.
அவர் முரண்பட்டு உதயசூரியனுடன் பிரிந்து சென்றாலும் தமிழ்தேசிய கூட்டமைப்பு தளர்வு அடையவில்லை இலங்கை தமிழரசு கட்சி வீட்டுச் சின்னம் மூலம் தொடர்ந்து பயணித்தது பயனித்துக்கொண்டே இருக்கிறது.
2009, மே, 18, முள்ளிவாய்க்கால் போர் மௌனத்திற்கு பின்னரே 2010, ஏப்ரல்,8,ம் திகதி தேர்தலுடன் அகில இலங்கை தமிழ் காங்கிரஷ் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் உட்பட பத்மினி சிதம்பரநாதன், செ.கஜேந்திரன் ஆகியோர் இரண்டாவதாக பிரிந்து சென்றார்கள்.
தமிழீழ விடுதலைப்புலிகளால் உருவாக்கிய தமிழ்தேசி கூட்டமைப்பில் தாம் இணைநமாட்டோம் என 2001,ல் அடம்பிடித்த புளட் கட்சி 2009, மே, 18, முள்ளிவாய்க்கால் போர் மௌனத்திற்கு பின்னர் இரண்டு வருடங்கள் கடந்து 2011,ல் புளட் கட்சி சித்தாத்தான் தலைமையில் தமிழ்தேசிய கூட்டமைப்பு உள்வாங்கப்பட்டது.
2013,ல் மீண்டும் ஆனந்த சங்கரி ஐயாவுக்கு ஒன்றுமே செய்ய முடியாமல் ஞானம் பிறந்து தமிழர் விடுதலை கூட்டணி வட மகாணசபை தேர்தலில் தமிழ்தேசிய கூட்டமைப்புடன் இணைந்து போட்டியிட்டு தேர்தலில் ஆனந்த சங்கரி ஐயா வெற்றி பெறாமையால் பின்னர் தானாக மழைக்கு முழைத்த காளான் போல் ஒதுங்கிவிட்டார்.
2020,ஆகஷட்,5, தேர்தலுக்கு முன்னதாக ஈபீஆர்எல்எவ், சுரேஷ பிரமச்சந்திரன் உள்ளிட்ட கட்சி தமிழ்தேசிய கூட்டமைப்பில் இருந்து விலகினர் இது தமிழ்தேசிய கூட்டமைப்பில் இருந்து விலகிய மூன்றாவது கட்சியாகும். வேறு ஒரு அணியாக வடமாகாண சபை முதலமைச்சராக இருந்த சீ.வி.விக்கினேஷ்வரன் ஐயா, ஶ்ரீகாந்தா, சிவாஜிலிங்கம், அனந்தி சசிதரன் என பலரும் தமிழ்தேசிய கூட்டமைப்பில் இருந்து விலகி தனித்தனி கட்சிகளை அமைத்து செயல்பட்டனர்.
தற்போது அவர்கள் மீண்டும் ஒற்றுமையாக செயல்பட வேண்டுமென்ற கருத்தும் அவர்களிடம் உள்ளது அது நல்ல விடயம் அது ஒரு புறம் இருக்க தற்போது ஐநா மனித உரிமை ஆணையாளருக்கு தமிழ்தேசிய கூட்டமைப்பிலும், இலங்கை தமிழரசு கட்சிக்குள்ளும் ஒற்றுமையாக ஒரு தீர்மானத்தின் அடிப்படையில் கடிதம் அனுப்பவில்லை இதனால் தமிழ்தேசிய கூட்டமைப்பு பிளவு, பிரிவு ஏற்பட்டதாக பல ஊடகங்களிலும் பல அரசியல் தலைவர்களும், ஆய்வாளர்களும் கருத்துக்களை தெரிவிப்பதை காண முடிகிறது.
அவ்வாறு எந்த சந்தர்பத்திலும் தமிழ்தேசிய கூட்டமைப்பு பிரிந்து செல்லவில்லை ஆனால் கருத்தொற்றுமை இல்லை என்பதால் வெவ்வேறாக கடிதங்கள் அனுப்பியதை எல்லோரும் ஏற்றுக்கொண்டனர்.
சம்மந்தன் ஐயா, செல்வம் அடைக்கலநாதன், சித்தாத்தன் , மாவை சேனாதிராசா ஆகிய தலைவர்களும் தாம் எக்காரணம் கொண்டும் தமிழ்தேசிய கூட்டமைப்பில் இருந்து வெளியேற வில்லை என்பதையே கூறியுள்ளனர்
கருத்து முரண்பாடு ஒரு ஜனநாயக கட்சிகளிடையே வருவது வழமை அதை சீர் செய்து தமிழ்தேசிய அரசியல் பணி தொடரும் எனவும் மேலும் கூறினார்.