கண்ணகி கலையிலக்கிய விழா

கண்ணகி கலை இலக்கியக் கூடலின் ஏற்பாட்டில் ஒன்பதாவது கண்ணகி கலையிலக்கிய விழா, கல்லடி துளசி மண்டபத்தில் தொடக்கவிழா, இயலரங்கு மற்றும் மாதவி கலையரங்கு என மூன்று அமர்வாக எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை(22) இடம்பெறவுள்ளது.
 
பேராசிரியர் செ.யோகராசா தலைமையிலான தொடக்க விழாவில், மட்டு இராமகிருஷ்ண மிஷன் பொது மேலாளர் ஸ்ரீமத் சுவாமி தக்‌ஷாயனந்த ஜீ மகராஜ், கிழக்குப் பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் அருட்தந்தை அ.நவரெத்தினம் ஆகியோர் ஆன்மீக அதிதிகளாகவும் அரசாங்க அதிபரும் மட்டு மாவட்ட செயலாளருமான மா.உதயகுமார் முதன்மை அதிதியாகவும் கலந்து சிறப்பிக்கவுள்ளார்.
 
மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வ.வசுதேவன், மட்டு வலயக்கல்விப் பணிப்பாளர் வே.மயில்வாகனம், மட்டு வீதி அபிவிருத்தி அதிகார சபை பிரதம பொறியியலாளர் திருமதி கலைவாணி வன்னியசிங்கம் ஆகியோர் சிறப்பு அதிதிகளாகவும்
மட்டு அடிப்புற அரங்கச் செயற்பாட்டு அமைப்பின் தலைவர் சு.சந்திரகுமார், கலாபூஷணம் இந்திராணி புஸ்பராஜா ஆகியோர் கலை இலக்கிய அதிதிகளாகவும்
கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.
 
சுவாமி விபுலாநந்தா அழகியற் கற்கைகள் இசைத்துறைத் தலைவர் கலாநிதி தெ. பிரதீபனால் தமிழ்மொழி வாழ்த்தும் கன்னங்குடா மகாவித்தியாலய ஆசிரியை திருமதி கெளசல்யா சஜிரூபனினால் கண்ணகி கலை இலக்கிய விழாக் கீதமும் திருமதி பிரியா கருணாகரனினால் அரங்க அறிமுகமும் கூடலின் துணைச் செயலாளர் திருமதி சுந்தரமதி வேதநாயகத்தினால் விழாப் பட்டயமும் வாசிக்கப்படவுள்ளது.
 
ஆன்மீக அதிதிகளின் ஆசியுரையினை தொடர்ந்து 2018 ஆம் ஆண்டு விழாக் குழுத் தலைவர் ப.குணசேகரனினால் வரவேற்புரையும் திருமதி வா. பார்த்தீபனின் நெறியாள்கையில் கலா சாதனாலயா மாணவிகளின் வரவேற்பு நடனமும் இடம்பெறவுள்ளது. 
 
கண்ணகி கலை இலக்கியக் கூடலின் தலைவர் செங்கதிரோன் த.கோபாலகிருஷ்ணனின் தொடக்கவுரையினை தொடர்ந்து தொல்லியலாளர் அமரர் க.தங்கேஸ்வரியின் நினைவுப்பரவலும் 
“தேசந் தழைத்திட வந்தாள்” தலைப்பில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரும் சட்டத்தரணியுமான கி.துரைராஜசிங்கத்தின் தலைமையிலான கவியரங்கத்தில் கவிஞர்களான மேரா, சோலையூரான் ஆ.தனுஷ்கரன், செளந். லெனாட் லொறான்ஸோ, வில்லூர் பாரதி ஆகியோர் கவி பாடவுள்ளதுடன் கூடலின் ஆவணவாக்கல் பொறுப்பாளரின் நெறியாள்கையில் ஆவணப்படக் காட்சியும் இடம்பெறவுள்ளது.
 
சேரன் செங்குட்டுவன் இயல் அரங்கு கிழக்குப் பல்கலைக்கழக சிரேஸ்ட விரிவுரையாளர் கலாநிதி சி.சந்திரசேகரம் தலைமையில் இடம்பெறவுள்ளதுடன் கிழக்குப் பல்கலைக்கழக சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவகப் பணிப்பாளர் பேராசிரியை அம்மன்கிளி முருகதாஸ் முதன்மை அதிதியாக கலந்து சிறப்பிக்கவுள்ளார்.
 
மண்முனை தென் எருவில் பற்று களுவாஞ்சிக்குடி பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரெட்ணம், கிழக்கு பல்கலைக்கழக கலை கலாசார பீட பீடாதிபதி கலாநிதி ஜீ.கென்னடி, மட்டு ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை அதிபர் பா.பரமேஸ்வரன் ஆகியோர் சிறப்பு அதிதிகளாகவும் வடக்கு கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்கள முன்னாள் உதவிப் பணிப்பாளர் கலாபூஷணம் எஸ்.எதிர்மன்னசிங்கம், கலாபூஷணம் கவிஞர் கா.சிவலிங்கம் ஆகியோர் கலை இலக்கிய அதிதிகளாக கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.
 
கூடலின் செயற்குழு உறுப்பினர் கலாநிதி அரிமா கலாநிதி அ.செல்வேந்திரனின் வரவேற்புரையுடனான நிகழ்வில் கதிரவன் பட்டிமன்ற தலைமை த.இன்பராசா தலைமையில் “சிலப்பதிகாரம் கூறும் வாழ்வியல் இன்று பொருந்துமா ?” எனும் தலைப்பில் பட்டிமன்றம் இடம்பெறவுள்ளதுடன் மட்டுநகர் சிவ வரதகரன், கவிஞர் அழகு தனு, கவிஞர் ஜீ.எழில்வண்ணன் ஆகியோர் பொருந்தும் எனவும் கவிஞர் அன்பழகன் குரூஸ், பாலமீன்மடு இரா. கலைவேந்தன் , புதுவையூர் பு.தியாகதாஸ் ஆகியோர் சிலப்பதிகாரம் கூறும் வாழ்வியல் இன்று பொருந்தாது என்றும் வாதிடவுள்ளனர்.
 
மட்டு சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவக சிரேஷ்ட விரிவுரையாளர் க.மோகனதாஸினால் “சிலப்பதிகார சிந்தனைகள்” எனும் சிறப்புரையும் இடம்பெறவுள்ளது.
 
மாலை அமர்வான மாதவி கலையரங்கு அழகியற் கற்கைகள் நிறுவக சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி சு.சிவரெத்தினம் தலைமையில் இடம்பெறவுள்ளதுடன் கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களப் பணிப்பாளர் ச.நவநீதன் முதன்மை அதிதியாக கலந்து சிறப்பிக்கவுள்ளார்.
 
மட்டு தமிழ்ப்பட்டறை இலக்கியப் பேரவை தலைவர் சி.மனோகரன்,மட்டு தமிழ்ச் சங்கத் தலைவர் சைவப்புரவலர் வி.ரஞ்சிதமூர்த்தி, பேராசிரியர் மா.செல்வராசா ஆகியோர் சிறப்பு அதிதிகளாகவும் ஓய்வுநிலை அதிபர் திருமதி திலகவதி ஹரிதாஸ், வித்தியாகீர்த்தி மங்களகெளரி விராகநாதன் ஆகியோர் கலையிலக்கிய அதிதிகளாகவும் கலந்துசிறப்பிக்கவுள்ளனர்.
 
கூடலின் பொருளாளர் ச.ஜெயராஜாவின் வரவேற்புரையுடனான நிகழ்வில் திருமதி ஷர்மிலதா பிரபாகரனின் நெறியாள்கையில் நர்த்தன பவன நாட்டியப்பள்ளி மாணவிகளின் புஷ்பாஞ்சலி நடனமும் அழகியற் கற்கைகள் நிறுவக தற்காலிக விரிவுரையாளர் கணேசமூர்த்தி கரனின் தமிழ்மொழி வாழ்த்து நடனமும் சக்தி ஜூனியர் சுப்பர்ஸ்டார் தேவதாஸ் லோகவியாசனால் கண்ணகி காவடி, காவியப் பாடல்களும் ரவீந்திரன் வீரேஸினால் கதாப்பிரசங்கமும் நர்த்தன பவன நாட்டியப்பள்ளி மாணவிகளின் கண்ணகி கீர்த்தனம் நடனமும் மகிழடித்தீவு சரஸ்வதி வித்தியாலய மாணவர்களின் நாட்டார் பாடலும் மட்டு புனித சிசிலியா மகளிர் தேசிய பாடசாலை ஆசிரியை திருமதி வாசுகி பார்த்தீபனின் நெறியாள்கையில் சீத்தாபகரணம் நாட்டிய நாடகமும் ந.ரனிஸ்குமார் மற்றும் ப.ரவிந்திரன் ஆகியோரினால் உடுக்கிசையும் இடம்பெறவுள்ளது.
 
கண்ணகி கலை இலக்கியக் கூடலின் துணைத் தலைவர் மா.சதாசிவத்தினால் நிறைவுரையும் கூடலின் செயற்குழு உறுப்பினர் மூ.சிவானந்தராஜாவினால் நன்றியுரையும் சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவக இசைத்துறைத் தலைவர் கலாநிதி தெ.பிரதீபனின் கண்ணகி வாழ்த்தும் இடம்பெற்று நிறைவுபெறவுள்ளது.

Related posts