மூங்கிலாறு பிரதான பாதையின் அவல நிலை.

 
 
 
 

போரதீவுப்பற்று பிரதேச செயல சபைக்குட்பட்ட மூங்கிலாறு சமுலையடிவட்டை பிரதான பாதையை கார்ப்பட்டாக புனரமைத்துத் தருமாறு பிரதேசவாசிகளால் கோரிக்கை விடுக்கப்படுகிறது.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது,

நீண்ட காலமாக எந்தவித புனரமைப்பும் அற்று குண்டும் குழியுமாக சேதமடைந்து கிடங்கு போல காணப்படுவதனால் பாதையினைப் பயன்படுத்தும் செயலகப் பிரிவுக்குட்பட்ட கிராம மக்கள் பல்வேறு அசெளகரியங்களுக்குள்ளாவதாக சுட்டிக்காட்டப்படுகிறது

14 ஆம் கிராம சந்தியிலிருந்து மூங்கிலாறு பாலத்தின் ஊடாக நெடியவட்டை, ஆனைகட்டியவெளி, சின்னவத்தை ஊடாக கொணகொல்லை அம்பாறை – மகோயா பிரதான பாதையை சென்றடையும் பிரதான பாதையே இவ்வாறு புனரமைப்பற்று காணப்படுவதாக பொதுமக்களால் விசனம் தெரிவிக்கப்படுகிறது.

போரதீவுப்பற்று மற்றும் நாவிதன்வெளி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பொதுமக்கள் அம்பாறை, உகனை ஆகிய செயலகப் பிரிவுக்கு தங்கள் அன்றாட கருமங்களை மேற்க்கொள்ள அவல நிலையிலுள்ள பாதுகாப்பற்ற இப்பாதையினையே பிரதான பாதையாக பயன்படுத்தி வருகின்றனர்.

பொதுமக்கள் உட்பட வாகன சாரதிகளின் தேவை கருதி குறித்த வீதியினை தூரித கதியில் கார்ப்பட்டாக புனரமைப்புச் செய்யுமாறு பிரதேசவாழ் பொதுமக்களும் சமூக மட்ட அமைப்புகளும் கோரிக்கை விடுக்கின்றன.

Related posts