கதிர்காம தீர்த்தம்!

காட்டுப் பாதை மூடப்பட்டது.

வரலாற்றுப் பிரசித்தி பெற்ற கதிர்காமம் கந்தன் ஆலயத்தின் வருடாந்த ஆடிவேல் விழா உற்சவத்திற்கான தீர்த்தம் இன்று 12ஆம் தேதி வெள்ளிக்கிழமை நடைபெற உள்ளது.
 
 அதை ஒட்டிய இறுதி மகா பெரகரா நேற்று வியாழக்கிழமை இரவு கோலாகலமாக நடைபெற்றது..
 
கடந்த மாதம் 29ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி கடந்த 15 நாட்களாக திருவிழா பெரஹர ஊர்வலம் நடைபெற்றுவந்தது.
 
 இதேவேளை, கதிர்காம காட்டுப்பாதை மூடப்பட்டுள்ளது. கடந்த யூலை மாதம் 22 ஆம் தேதி திறக்கப்பட்டு ஆகஸ்ட் மாதம் 5ஆம் தேதி மூடப்பட்டது. இம்முறை 29 ஆயிரத்து 694 பேர் காட்டுப் பாதையால் பயணித்திருக்கிறார்கள்.
 
 .பெரும்பாலும் பல சோதனைகளையும் துன்பங்களையும் சந்தித்து அவர்கள் சென்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
 
அவர்களது யாத்திரை என்றுமில்லாதவாறு இம்முறை பலத்த சோதனைகளுக்கு உள்ளாகி இருந்தது. 
அவர்கள் பயணித்த பாதை, ஆற்றைக் கடக்கும் சிரமம் ,அவர்கள் படும் பாடு  போன்றவற்றை இப் படங்கள் சித்தரிக்கின்றன

Related posts