கம்பரெலிய திட்டத்தில் ஆரையம்பதி வாகரை, வாழைச்சேனை, கிரான், வவுணதீவு உள்ளிட்ட தமிழ் பிரதேசங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளர் பூ.பிரசாந்தன் சுட்டி காட்டியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்…
கடந்த வருடம் பட்டிருப்புத் தொகுதியான களுவாஞ்சிக்குடி,வெல்லாவெளி,பட்
யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு வறுமை மட்டத்தில் குறிகாட்டி அதிகமாக உள்ள இப்பிரதேசங்களை வலுவாக்க வேண்டிய அரசியல் தலைமைகள் நல்லாட்சி எனவும்,ஜக்கிய தேசிய கட்சியின் ஆட்சிக்கு முட்டுக்கொடுத்து இணைக்க ஆட்சி நடத்தும் தமிழ் தலைமைகள் இவற்றில் கண்ணும் கருத்துமாக இருக்க வேண்டிய சமயத்தில் இவ்வாறு தொடர்ந்தும் தமிழ் பிரதேசங்கள் புறக்கணிக்கப்படுவதனை வேடிக்கை பார்ப்பதனை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் குறிப்பிட்டார்.
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் கிராமிய அமைப்பாளர்களுடனான கலந்துரையாடல் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைமைகாரியாலயத்தில் நடை பெற்ற போது கருத்து தெரிவிக்கையிலேயே மேற்காண்டவாறு குறிப்பிட்டார்.