(எஸ். சதீஸ் )
மட்டக்களப்பு மாவட்ட மட்ட கராத்தே போட்டி வெபர் மைதானத்தில் நேற்று (01ம்திகதி ) வியாழக்கிழமை நடைபெற்றது .
இதில் மண்முனை வடக்கில் உள்ள மட்டக்களப்பு விளையாட்டு கழகம் அதிக பதக்கங்களை பென்று நடப்புச் சம்பியன் பட்டத்தை சுவீகரித்தது.
இப் போட்டி நடுவர்களாக அகில இலங்கை கராத்தே சம்மேளனத்திலிருந்து உபாலி சென்ஷி தலைமையிலான நடுவர் குழுவால் நடாத்தப்பட்டது.
இப்போட்டியில் தேசிய மட்டத்தில் பதக்கங்களை வென்ற வீரர்களும் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.
இதில் பதக்கங்களை வென்ற வீரர்கள் எதிர்வரும் 17ஆம் திகதி அம்பாறை மாவட்டத்தில் நடக்க இருக்கும் கிழக்கு மாகாணமட்ட கராத்தே போட்டியில் விளையாட தகுதி பெற்றுள்ளனர்
பயிற்சி விப்பாளர் சுகிர்தன், டோமிநோ,மதன் ஆகியோரினால் பயிற்சி அளிக்கப்பட்டு கிழக்கு மாகாண போட்டிக்கு தெரிவாகிய வீரர்களாக, ஜே.கிருஷ்ணா, க.விஷ்ணு,அ.நிலோஜன், த.துஷ்யந்தன், க.மதன்ராஜ், இ.நிரோஷன்,சிராஜ், அபிநயன், கௌசிகன், பிரசாந்த், அனர்தன் ஆகியோர் தெரிவாகியுள்ளனர்