கல்முனையின் பிரபலபாடசாலைகளில் இன்று சுத்தம்செய்யப்படும்மாநகரசபை வைத்தியஅதிகாரி மாநகரஉறுப்பினர் ராஜனிடம் உறுதி.

கொவிட் காலத்தில் கல்முனையின் பிரபல பாடசாலைகளில் அகற்றப்படாதிருந்த  குப்பை கூழங்களை இன்று(24)சனிக்கிழமை அகற்றுவதற்கு கல்முனை மாநகரசபை பிரதம வைத்திய அதிகாரி டாக்டர் அர்ஸத் காரியப்பர்  நடவடிக்கை எடுத்துள்ளார்.
 
கல்முனை மாநகரிலுள்ள இரு பிரபல பாடசாலைகளில் கொவிட்காலத்தில் குப்பைகள் அகற்றப்படாதிருந்தமை தொடர்பாக பாடசாலை நிருவாகங்கள் மாநகரசபையில் முறையிட்டிருந்தும் பலனளிக்காமல் போனதான் காரணமாக கல்முனை மாநகரத்திற்கான மாநகரசபை உறுப்பினர் சந்திரசேகரம் ராஜனிடம் முறையிடப்பட்டது.
 
அவர் இதுவிடயத்தை கல்முனை மாநகரசபை பிரதம வைத்திய அதிகாரி டாக்டர் அர்ஸத் காரியப்பரிடம் தொலைபேசிமூலம் தொடர்புகொண்டு தெரியப்படுத்தினார்.
 
உண்மையில் இதுவிடயம் குறித்து தனக்கு இதுவரை தெரியாதென்றும் உடனடியாக அதாவது நாளை(25) சனிக்கிழமை அவற்றை அகற்ற நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்தார்.
 
அதன்படி இன்று(25)சனிக்கிழமை நீண்டநாள்களாக தேங்கியிருக்கும் குப்பைகூழங்கள் அகற்றப்படவிருப்பதாகவும் பாடசாலைகள் தொடங்குவதற்கு இது இலகுவாகவிருக்குமெனவும் உறுப்பினர் ராஜன் தெரிவித்தார்.
 
 

Related posts