கல்முனையில் எதிர்வரும் சனிக்கிழமை முதல் தடுப்பூசி வழங்கப்படும்.அவதி தேவையில்லை: அனைவருக்கும் வழங்க தடுப்பூசிகிடைக்கும்!கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் தௌபீக் தெரிவிப்பு.

கடந்தசில வாரங்களாக ஆவலோடு  எதிர்பார்க்கப்பட்டுவந்த கல்முனைப்பிராந்தியத்திற்கான  தடுப்பூசி செலுத்தும் பணி எதிர்வரும் சனிக்கிழமை (26) முதல் ஆரம்பிக்கப்படும்.30வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இத்தடுப்பூசி வழங்கப்படும்  என கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஏ.ஆர்.எம்.தௌபீக் தெரிவித்தார்.
 
 அவர் மேலும் தெரிவிக்கையில்:
சனிக்கிழமை முதல் தடுப்பூசி வழங்கப்படவிருப்பதால் அன்றையதினமே பெறவேண்டுமென அவசரப்பட அவதிப்பட வேண்டிய அவசியமில்லை. மக்கள் ஒன்று கூடி தொற்றை ஏற்படுத்தவேண்டாம். தேவையான தடுப்பூசிகள் வரவுள்ளன. எனவே பதியப்படும் ஒழுங்கின்பிரகாரம் ஊசியை ஆறுதலாகப்பெற்றுக்கொள்ளலாம்.
 
அதற்கான முன்னாயத்தவேலைகள் சகல சுகாதாரப்பிரிவுகளிலும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.அங்கு 30வயதுக்கு மேற்பட்டோர் கர்ப்பிணித்தாய்மார்கள் தொழிற்சாலை ஊழியர்கள் வைத்தியசாலை மற்றும் சுகாதாரஅலுவலகங்களில் பணியாற்றுவோர் வீட்டிலிருக்கும் நெருங்கிய உறவுகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி செலுத்தப்படவிருக்கின்றன.
 
அதேவேளை பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் கல்விசாரா ஊழியர்களுக்கும் தடுப்பூசி வழங்கும் செயற்பாடு கிழக்குமாகாணமெங்கும் நடைமுறைப்படுத்தப்பட்டுவருகின்றன.
வைத்தியசாலைகள் சுகாதாரஅலுவலகங்கள் குறித்த நிலையங்கள் போன்றவற்றில் அவை வழங்கப்படவிருக்கின்றன. அந்தந்த சுகாதாரவைத்தியஅதிகாரிகள பொதுசுகாதாரபரிசோதகர்கள் கிராமசேவையாளருடன் தொடர்புகொண்டு அவற்றை உறுதிபப்டுத்திக்கொள்ளலாம்.
கொழும்பின் டெல்ரா திரிபவைரஸ்  கிழக்கிற்குள் ஊடுருவலாம் எனவே மகக்ள் அவதானமாகவிரக்கவேண்டும்.
 
24மணிநேரத்தில் 6 மரணங்கள் 144தொற்றுக்கள்.!
கிழக்கு மாகாணத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 144 கோவிட் தொற்றாளர்கள் இனங்காணப்பட்ட நிலையில் 6 கோவிட் மரணங்களும் இடம்பெற்றுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஏ.ஆர்.எம்.தௌபீக் தெரிவித்தார்.
 
தொடர்ந்தும் தெரிவிக்கையில்
கடந்த 24 மணி நேரத்தில் கல்முனையில் அதிக தொற்றாளர்களாக 69 நபர்களும் மட்டக்களப்பு மாவட்டத்தில் 50 திருகோணமலை 13 அம்பாறையில் 12 எனவும் புதிய தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளார்கள்.
 
திருகோணமலை மாவட்டத்தில் 3 மரணங்கள் மட்டக்களப்பு 01 கல்முனை 02 என ஆறு மரணங்களும் பதிவாகியுதுள்ளது.
மொத்தமாக மூன்றாம் அலையின் பின் 13457 கோவிட் தொற்றாளர்கள் பதிவாகியுள்ளார்கள். 304 மரணங்களும் மொத்தமாக 330கோவிட் மரணங்கள் ஏற்பட்டுள்ளது.
 
இதனை கருத்திற் கொண்டு மக்கள் அவதானத்துடன் சுகாதார வழி முறைகளை இறுக்கமாக கடைப்பிடிக்கவும் சமூக இடைவெளிகளை பேணுதல் முகக்கவசம் அணிதல் கைகளை அடிக்கடி சவர்க்காரம் இட்டு கழுவுதல் போன்ற விடயங்களை அரசின் கட்டுப்பாடுகளுக்கு அமைய நடந்து கொள்ள வேண்டும்.
 
எதிர்வரும் காலங்கள் விடுமுறை மற்றும் பண்டிகை பெருநாள் காலமாகையால் தேவையற்ற ஒன்று கூடல்கள் வெளிச் செல்லல் என்பனவற்றை தவிர்க்கவும் இலங்கையில் மிக வேகமாக கொழும்பு பகுதிகளில் புதிய வகை டெல்டா வைரஸ் பரவுவதாக பேசப்பட்டு வருகிறது.
 
இவ்வாறான நோய் தாக்கத்தில் இருந்தும் பாதுகாப்புப் பெற முன்கூட்டிய சுகாதார வழிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும்.எதிர்வரும் சனிக்கிழமை(26) ம் திகதி முதல் கல்முனை பிராந்திய சுகாதார சேவை பிரிவில் கோவிட் தடுப்பூசி ஏற்றுவதற்கான நடவடிக்கைகள் இடம்பெற்றுள்ள நிலையில் இதனை பெற உரிய பொது சுகாதார பரிசோதகர் இகிராம சேவகர் ஆகியோர்களை அணுகி உரிய இடங்களை தீர்மானித்து தடுப்பு மருந்துகளை பெற்றுக்கொள்ளுமாறும் மேலும் தெரிவித்தார்.
 

Related posts