இ.கி.மிசன்,காரைதீவு விபுலாநந்த பணிமன்றத்திற்கு ஆன்மீகநூல்கள் அன்பளிப்பு

ராமகிருஸ்மிசன் மட்டு.மாநிலக்கிளை ,ஒரு தொகுதி ஆன்மீக இலக்கிய நூல்களையும் ,அவற்றை காட்சிபப்டுத்துவதற்கான இரும்பு அலுமாரியையும்  காரைதீவு சுவாமி விபுலாநந்தா ஞாபகார்த்த பணிமன்றத்திற்கு வழங்கிவைத்தது.
 

உலகின் முதல் தமிழ்ப்பேராசிரியர் முத்தமிழ் வித்தகர் ஸ்ரீமத் சுவாமி விபுலாநந்த அடிகளாரின் மணிமண்டத்தில் இயங்கும் நூலகத்திற்காக இத்தொகுதி நூல்கள் வழங்கப்பட்டன.

கல்லடி இ.கி.மிசன் ஆஸ்ரமத்தின் மேலாளர் ஸ்ரீமத் சுவாமி தக்ஷஜானந்தா ஜீ  மஹராஜ்  , துணைமேலாளர் ஸ்ரீமத் சுவாமி நீலமாதவானந்தா ஜீ மஹராஜ் ஆகியோர் இதனை பணிமனற்த்திற்கு கையளித்தனர்.
 

அதனை உத்தியோகபூர்வமாக காரைதீவு சுவாமி விபுலாநந்த ஞாபகார்த்தபணிமன்ற முன்னாள் தலைவர் வி.ரி.சகாதேவராஜாவிடம் ,மிசன்சார்பில் மன்றச்செயலாளர் கு.ஜெயராஜி நேற்றுமுன்தினம் இதனை வழங்கிவைத்தார்.

இந்நிகழ்வு காரைதீவு விபுலாநந்தா மணிமண்டப வளாகத்தில் இடம்பெற்றது.

அவ்வமயம்  இந்நிகழ்வில் சுகாதாரமுறைப்படி மட்டுப்படுத்தப்பட்ட பணிமன்ற பிரமுகர்கள் ஆலயபிரமுகர்களும் கலந்துகொண்டனர்.

மன்றச்செயலாளர் கு.ஜெயராஜி இ.கி.மிசனுக்கு நன்றி தெரிவித்துரையாற்றினார்.

Related posts