மட்டக்களப்பு வெல்லாவெளி பிரதேசத்தில் இருந்து கல்முனை நட்பிட்டிமுனைக்கு மாடுகளை தரைவழிப் பாதையூடாகவும்,மட்டக்களப்பு வாவியூடாகவும் சாய்த்துச் சென்று கரையை கடந்து துரைவந்தியமேடு பகுதியில் மயங்கி விழுந்துள்ள நிலையில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் இன்று திங்கட்கிழமை (30)காலை 10 மணியளவில் கல்முனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட துரைவந்தியமேடு கிராமத்தில் மாடுகளை பிணைத்துக் கொண்டிருந்தபோதே இடம்பெற்றுள்ளது.நாட்டிலே ஊரடங்கு பிறப்பித்துள்ள நிலையில் மாடுகளை சாய்த்து வந்த மண்டூர் பாலமுனையை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான செல்லத்துரை-கிருஸ்ணமூர்த்தி(
இவ்வாறு உயிரிழந்துள்ள சம்பந்தமாக பிரதேசவாசிகள் கல்முனை பொலிசாருக்கு தெரியப்படுத்தியுள்ள நிலையில் இவ்விடத்திற்கு விரைந்த கல்முனை பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.