இராணுவத்தின் ஏற்பாட்டில் கொரோனா டெங்கு அபாயத் தவிர்ப்பு பொதுக்கூட்டம்.

இராணுவத்தின்  242 வது கட்டளை அதிகாரியின் ஏற்பாட்டிற்கிணங்க திருக்கோவில் பிரதேசத்தில் எதிர்வரும் காலங்களில் வெள்ள அபாயம் கோவிட்19 டெங்கு மலேரியா பரவல் தொடர்பான அபாயத்தினைக் குறைப்பது பற்றிய  பிரதேச மட்டக்கூட்டம் திருக்கோவில் பிரதேச செயலாளர் தங்கையா கஜேந்திரன் தலைமையில் திருக்கோவில் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நேற்று  இடம்பெற்றது.
 
இந் நிகழ்வில் திருக்கோவில் பிரதேச செயலாளர் த.கஜேந்திரன் இ242வது கட்டளைத்தளபதி  ஹெமால் பீரிஸ்242வது கட்டளைத்தளபதி சமூக விழிப்பூட்டல் உத்தியோகத்தர் கேணல் விஜயரத்ன மற்றும் அனர்த்த முகாமைத்துவ அபிவிருத்தி உத்தியோகத்தர் ரி.தனராஜ் சாகாம விசேட அதிரடி; படை பொறுப்பதிகாரி பி.ராஜபக்ச சங்கமன் கிராம கடற்படை பொறுப்பதிகாரி ஜி. தம்மிக்கதிருக்கோவில் உதவிப்பிரதேச செயலாளர் க.சதிசேகரன்திருக்கோவில் பிரதேச சபை செயலாளர் எஸ்.சத்தியசீலன் திருக்கோவில் ஆதார வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர்.டாக்டர்  மசூத் மற்றும் தம்பிலுவில் கமநல மத்திய நிலைய உத்தியோகத்தர் ம.அஜந்தன் நீர்வழங்கல் வடிகாலமைப்பு அதிகாரசபையின் பொறுப்பதிகாரி திரு கே.கமலகாந்தன்.திருக்கோவில் பிரதேச செயலக கணக்காளர்  கே.அரசரெத்தினம் திருக்கோவில் பிரதேச செயலக நிருவாக கிராம  உத்தியோகத்தர் திருமதி பரிமளவாணி சில்வஸ்டர் மற்றும் சமுர்த்தி சமூக பாதுகாப்பு உத்தியோர்த்தர் எஸ்.பி..சீலன் சிரேஸ்ட பொது சுகாதார பரிசோதகர் எஸ்.மகேஸ்வரன் மற்றும் திருக்கோவில் பிரதேச செயலக கிராம சேவை உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.
 
மேலும் இக் கூட்டத்தில் சில திர்மானங்களும் எடுக்கப்பட்டன.
 
1.வடிகான்களை துப்பரவு செய்தல்.
2.வெற்று வளவுகளில் அமைக்கப்பட்டிருக்கு பாவனை அற்ற கிணறுகளை மண் இட்டு மூடுதல்.
3.டெங்கு இமலேரியா கட்டுப்படுத்தல் குழுவினர்களின் தீர்மானங்களை நடைமுறைக்கொண்டுவருதல்.
4.இராணுவம் அதிரடிப்படை கடற்படை பொலிஸ் பிரதேச செயலகம் பிரதேசசபை சுகாதாரவைத்தியப்பிரிவு மற்றும் ஏனைய தொடர்புடைய அரச நிறுவனங்கள் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் உதவியுடன் ஒன்றிணைந்ததான வேலைத்திட்டங்களை அமுல்படுத்துதல் போன்ற தீர்மானங்கள் எடுக்கப்பட்டது.

Related posts