கல்முனை வடக்கு பிரதேச செயலக பிரதேச செயலாளர் ஜெயரூபன் சீதாராம் 18.11.2018 இன்று காலமானார். களுதாவளையை பிறப்பிடமாகவும் திருக்கோவிலை வசிப்பிடமாகவும்கொண்ட இவர் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் கடமைகளை பொறுப்பேற்றிருந்தார்.
இவர் திருக்கோவில் பிரதேச செயலாளராகவும் பதில் கடமையாற்றியிருந்தார்.
சுகயீனம் காரணமாக கொழும்பு தனியார் வைத்தியசாலையில் சிகிச்சசைபெற்றுவந்த நிலையில் காலமாகியுள்ளார்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திப்பதோடு எமது கண்ணீர் அஞ்சலியையும் காணிக்கையாக்குகின்றோம்.