ஸ்ரீலங்கா முஸ்லிம்காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப்ஹக்கீமிடம் அன்பான தயவான வேண்டுகோளை விடுக்கிறோம்.
அதாவது கல்முனையின் நிலையானஅபிவிருத்தி தமிழ் முஸ்லிம் இனஜக்கியம் எதிர்கால அமைதி சமாதானம் கருதி கடந்த 30வருடகாலமாக இழுத்தடிக்கப்பட்டுவரும் கல்முனை வடக்கு பிரதேச செயலக தரமுயர்த்தல் விவகாரத்திற்கு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடுவேண்டுகிறோம்.
இவ்வாறு கல்முனை சுபத்ராராமய விகாராதிபதி வண.ரண்முத்துகல சங்கரத்ன தேரர் வேண்டுகோள் விடுத்தார்.
கல்முனை வடக்கு பிரதேசசெயலக தரமுயர்த்தல் விவகாரம் நாளுக்குநாள்
விஸ்வரூபமெடுத்து வருவதையொட்டி அவர் இந்த வேண்டுகோளை ஊடகங்கள் வாயிலாக விடுத்துள்ளார்.
கல்முனையிலுள்ள ஒரு மதத்தலைவர் என்றரீதியில் இந்த பகிரங்கவேண்டுகோளை விடுக்கிறேன். அமைச்சர் இந்த விடயத்தில் ஒத்துழைப்பு நல்குவதில் தயக்கம் காட்டினாலோ அல்லது தவறினாலோ நாம் சாகும்வரை போராட்டத்திலீடுபடவேண்டிநேரிடும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
அவர் மேலும் கருத்துரைக்கையில்:
1989களில் இருந்து கல்முனை வடக்கு பிரதேச செயலகம் இனமதபேதமின்றி அந்தமக்களுக்கான சேவையை வழங்கிவருகிறது. எனினும் காணி நிதி விடயங்களில் மட்டுப்படுத்தப்பட்டளவு அதிகாரத்துடன் இருப்பதால் அதனை முழுமையான செயலகமாக தரமுயர்த்தவேண்டுமென்று அந்தமக்கள் தொடர்ச்சியாககோரிக்கைவிடுத்துவருகின்றனர்.
ஆனாலும் தொடர்ச்சியாக இதற்கு தடை முட்டுக்கட்டை போட்;டவண்ணம் ஒருசிலர்செயற்பட்டுவருதாக அறிகிறோம். தங்கள் அரசியல் சுயலாபத்திற்காக மக்களை பலிக்கடாவாக்கிவருகிறார்கள்.
இதனைத்தடுப்பதில் அவர்களுக்கு என்ன இலாபம்? குறித்த செயலகம் தனித்து ஒருஇனத்திற்கானது மட்டுமல்ல மாறாக மூவினமக்களுக்கானதாகும். எனவே இதுவிடயத்தில் சகலரும் ஒருமித்து தீர்வுகாணவேண்டும்.
உண்மையில் தலைவர்கள் இதயசுத்தியாக செயற்பட்டால் கல்முனையை மற்றுமொரு கொழும்பாகவோ காத்தான்குடியாகவோ மாற்றமுடியும். இனிமேல் கலவரம் போராட்டம் முரண்பாடு என்பன முற்றாக தவிர்க்கப்படவேண்டும். யாரென்றாலும் ஏட்டிக்குபோட்டியாக செயற்பட்டு ஜக்கியமாக இருக்கின்ற மக்களைக்குழப்பவேண்டாம்.
மிதவாதத்தலைவராக இருக்கின்ற அமைச்சர் ஹக்கீம் இதில் தலையிட்டு இருஇனங்களும் நிம்மதியாக சந்தோசமாக சகோதரத்துவத்துடன் வாழவழிவகுக்கவேண்டும். என்றார்.