(க. விஜயரெத்தினம்)
வடகிழக்கு தமிழ்மக்கள் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ஷவுக்கு வாக்களித்து நாட்டின் அபிவிருத்தியில் இணைந்திருங்கள் என முன்னாள் பிரதியமைச்சரும்,தமிழர் ஐக்கிய முன்னணியின் தலைவருமான விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணாம்மான்)தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ஷவை அறிவித்துள்ளதையடுத்து அவரிடம் ஞாயிற்றுக்கிழமை(11)தொடர்பு கேட்டபோதே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில் …
நல்லாட்சி அரசாங்கம் என்று சொல்லிக்கொண்டு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும்,தமிழ்தேசிய கூட்டமைப்பும் தமிழ்மக்களை ஏமாற்றி விட்டது.தமிழ்தேசிய கூட்டமைப்பு தமிழ்மக்களை தொடர்ச்சியாக ஏமாற்றிக்கொண்டு வருகின்றது.இன்னும் தமிழ்மக்கள் ஏமாறுவதற்கு தயாரில்லை.
கிழக்குத்தமிழர்களின் நிலம்,நிருவாகம்,நிதி,உள்ளிட்ட அனைத்து வளங்களும் நாளுக்கு நாள் சூறையாடப்படுகின்றது.தமிழ்மக்
இன்று வடகிழக்கு தமிழ்மக்களை தமிழ்தேசிய கூட்டமைப்பு ஏமாற்றிவிட்டது.இன்னும் தமிழ்மக்கள் ஏமாற்றுவதற்கு தயாரில்லை.இன்று தமிழ்மக்கள் மத்தியிலும்,அவர்களின் மனதிலும் மாற்றம் ஒன்றுக்காக ஏங்கிக்கொண்டிருக்கின்றார்கள்.
தமிழ்தேசிய கூட்டமைப்புக்கு வாக்களிப்பதனால் கூட்டமைப்பின் குடும்பம்மட்டும்தான் அபிவிருத்தியையும்,வேலைவாய்ப்பு மற்றும் அரச சலுகையை அனுபவிக்கும்.தமிழ்மக்கள் சந்தோசமாக வாழவேண்டும் எனும் சிந்தனை அவர்களிடத்தில் இல்லை.தமிழ்தேசிய கூட்டமைப்பை ஐக்கிய தேசியக்கட்சி பகடக்காயாக வைத்து,மாற்றுச்சமூகத்தை வாழவைக்கின்றது.
கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரமுயர்த்துவதற்கு இயலாத தமிழ்தேசிய கூட்டமைப்பு எப்படி புரையோடிப்போன இனப்பிரச்சனைக்கு தீர்வைப் பெற்றுக் கொடுக்கப்போகுது.தமிழ்தேசிய கூட்டமைப்பால் தமிழ்மக்களுக்கு ஒன்றும் பெற்றுக் கொடுக்க முடியாது.பாராளுமன்றத்தில் நிழல் பிரதமராக செயற்படும் சுமந்திரன் கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்தும்படி ஏன் பிரதமரை கோரவில்லை.நக்குண்டார் நாவிழக்கார் என்பதுதான்.தங்களின் தேவையைப் பெற்றுள்ளார்கள்.கேட்க முடியாது.
எனவே தமிழ்மக்கள் மட்டுமல்ல சகோதர சிங்கள,முஸ்லிம் மக்கள் மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியைத்தான் விரும்புகின்றார்கள்.நாட்டில் இன,மத,பேதங்களை மறந்து நாட்டில் உள்ள அனைவரையும் நேசிக்கும் தலைவன் மஹிந்த ராஜபக்ஷவேதான்.தமிழ்தேசிய கூட்டமைப்பின் பின்னால் சென்றால் தமிழ்மக்களுக்கு எந்த விமோசனமும் கிடையாது.தமிழ்மக்கள் இன்னும் வறுமையாகத்தான் இருக்கனும் என்று தமிழ்தேசிய கூட்டமைப்பு விரும்புது.ஆனால் தமிழ்தேசிய கூட்டமைப்பின் பிள்ளைகள் நாட்டுக்காகவோ,தமிழ்மக்களுக்கா
முதலில் தமிழ்மக்களின் பசியைப்போக்கனும்.அதற்குப்பின்