கல்லடிப் பாலத்திலிருந்து தற்கொலைக்கு முயன்றவரால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளதுஇன்று மாலை அப்பகுதியில் நடமாடிய ஒருவர், திடீரென கல்லடிப் பாலத்தில் நின்று கடலுக்குள் பாய்ந்துள்ளார். எனினும் அவ்விடத்தில் நின்ற மீனவர்கள் குறித்த நபரைக் காப்பாற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளதுஇதன் போது அப்வீதியால் சென்றவர்கள் அந்த இடத்தில் கூடியதால் இந்நிலையில் பொலிஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. எனினும் தற்கொலைக்கு முயன்றவர் யார் என்ற விபரம் வெளியாகவில்லைஅவ்விடத்தில் சற்று பதற்றம் ஏற்பட்டதுடன், கூட்டமும் அதிகரித்தது,இதேவேளை, குறித்த பாலத்திலிருந்து அண்மைய நாட்களாக ஒரே பாணியில் தற்கொலைக்கு முயற்சி செய்துவருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
Related posts
-
சுவிஸ் உதயம் கிழக்கு அமைப்பின் மாதாந்த நிருவாக சபைக்கூட்டம்
சுவிஸ் உதயம் கிழக்கு அமைப்பின் மாதாந்த நிருவாக சபைக்கூட்டம் பெரியபோரதீவு எரிபொருள் நிரப்பு நிலையத்தில் அமைந்துள்ள அமைப்பின் உப காரியாலயத்தில் அமைப்பின்... -
அம்பாறை மாவட்டத்தில் 555,432 பேர் வாக்களிக்கத் தகுதி-மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலர் தெரிவிப்பு
அம்பாறை மாவட்டத்தில் ஜனாதிபதி தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூா்த்தி செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான சிந்தக அபேவிக்ரம குறிப்பிட்டார்.... -
சுவிஸ் உதயம் அமைப்பின் கிழக்கு மாகாணக் கிளையின் விஷேட நிர்வாக சபைக்கூட்டம்
சுவிஸ் உதயம் அமைப்பின் கிழக்கு மாகாணக் கிளையின் விஷேட நிர்வாக சபைக்கூட்டம் அமைப்பின் தலைவர் ஓய்வுநிலை பிரதிக்கல்விப்பணிப்பாளர் மு.விமலநாதன் தலைமையில்...