சம்மாந்துறையில் நடைபெற்ற மெகா நைட் மென்பந்து கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் களுவாஞ்சிக்குடி மெக்ஸ் விளையாட்டுக் கழகத்தினர் சம்பியனாக வெற்றி வாகை சூடிக் கொண்டனர்.
சம்மாந்துறை வீரமுனை வினாயகர் விளையாட்டு கழகத்தின் ஏற்பாட்டில் கடந்த (22.09.2020) ஆரம்பமாகிய இச் சுற்றுப்போட்டி நேற்று (29.09.2020) நிறைவுக்கு வந்தது. ஒரு அணிக்கு 8 பேர் 5 ஓவர்கல் என மட்டுப்படுத்தப்பட்ட மெகா நைட் மென்பந்து கிரிகெட் சுற்று போட்டியில் . மட்டக்களப்பு,அம்பாறை மாவட்டங்களை சேர்ந்த 60 கழகங்கள் பங்குபற்றி இருந்தன.
இவ் சுற்றுப்போட்டிகளில் இருந்து இறுதி சுற்றுக்கு சம்மாந்துறை யுனிட்டி மற்றும் களுவாஞ்சிக்குடி மெக்ஸ் கழகமும் தெரிவாகி இருந்தன.
இறுதி சுற்றுத் தொடரில் முதலில் சம்மாந்துறை யுனிட்டி துடுப்பெடுத்து ஆடியது டன் ஐந்து ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்களியும் இழந்து 26 ஒட்டங்களை பெற்று இருந்தனர்.
இதனைத் தொடர்ந்து 27 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு களுவாஞ்சிக்குடி மெக்ஸ் கழகத்தினர் துடுப்பெடுத்து ஆடினர். தொடரின் ஆரம்பத்தில் சம்மாந்துறை யுனிட்டி அணி வீரர்களின் பந்து வீச்சு மற்றும் களத்தடுப்பு என்பன களுவாஞ்சிக்குடி மெக்ஸ் அணியினருக்கு சவாலாக அமைந்த போது களுவாஞ்சிக்குடி அணியின் இறுதி வரிசை உறுப்பினர்களின் சாதுரியமான விளையாட்டும் சம்மாந்துறை யுனிட்டி அணியினரின் தடுமாற்றமும் களுவாஞ்சிக்குடி மெக்ஸ் கழகத்தின் வெற்றி இலக்கை நோக்கி இட்டுச் சென்றிருந்தன.
இறுதியில் 4.5 ஓவர் முடிவில் நான்கு விக்கெட்டக்களை இழந்து 27 ஒட்டங்களை பெற்று வெற்றி பெற்றதுடன் சம்மாந்துறையில் மெகா நைட் மென்பந்து கிரிக்கெட் வெற்றிக் கிண்ணத்தையும் 30ஆயிரம் ரூபா பணப் பரிசையும் பெற்றதுடன் சம்மாந்துறை யுனிட்டி கழகம் 15 ஆயிரம் ரூபா பணப்பரிசையும் கிண்ணத்தையும் பெற்றுக்கொண்டனர்.
நிகழ்வில் விளையாட்டு கழகங்களின் வீரர்கள் பொது மக்கள் என பெரும் எண்ணிக்கையானோர் கலந்து கொண்டனர்.