காணாமல் போனவர்களின் உறவுகள் ஆளுனர் செயலகத்திற்கு முன்னால் போராட்டம்
திருகோணமலை மாவட்டத்திலுள்ள காணாமல் போனவர்களின் உறவுகள் நேற்றைய தினம் வியாழக்கிழமை ஆளுனர் செயலகத்திற்கு முன்னால் போராட்டம் ஒன்றில் ஈடுபட்டனர்.
தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தும் வகையில் வாசகங்களை எழுதிய பதாதைகளை ஏந்தியவாறு இப் போராட்டம் நேற்று பகல் முதல் நடைபெற்றது. இறுதியில நேற்றைய தினம் திருகோணமலைக்கு விஜயம் செய்திருந்த இராஜாங்க ளஅமைச்சர் விஜயகலா மகேஸ்வரனிடம் அவர் தங்கியிருந்த விடுதிக்குச் சென்று மகஜர் ஒன்றையும் கையளித்தனர்.
வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களது உறவுகளின் சங்கமானது கிழக்கு மாகாண ஆளுனர் அலுவலகத்திற்கு முன்னால் தொடர்ந்தும் 853 நாட்களாக நீதிக்கான போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நாஙட்கள் எங்களது உறவுகளின் அடிப்படைத் தேவைகள் கூட பூiர்த்தி செய்யப்படாத நிலையில் உறவுகளைத் தேடி அலைந்து வருகிறோம்.
காணாம ஆக்கப்பட்ட உறவுகளுக்கான போராட்டத்திற்கு நீதி இது வரை கிடைக்கவில்லை, உறவுகளின் அடிப்படை வாழ்வாதாரத்துக்கான தேவைகள் நிறைவு செய்வதில் பல்வேறு சிரமங்களை அனுபவிக்கின்றனர்.
காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் இப்போதும் குடியிருப்புக்களுக்காக வீடுகள் இல்லாத நிலையில் உறவினர்களின் வீடகளில் தங்கி வருகின்றனர். இவர்களுக:கு நிரந்தரக் காணிகள் வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
எம து உறவுகளின் அரசியல் கைதிகளைச் சிறைச்சாலைக்குச் சென்று பார்வையிட அனுமதி வழங்கப்பட வேண்டும். உமது உறவுகளின் தகைமைகளுக்கு ஏற்ப வேலைவாய்ப்புக்கள் வழங்குவதன் மூலம் வாழ்வாதார மேம்பர்டுகளுக்கு உதவுதல் போன்ற கோரிக்கைகளுடன் இந்த மகஜர் வழங்கிவைக்கப்பட்டது.