நாட்டில் இருந்து போதைப்பொருள் பாவனை முற்றாக அழித்தொழிக்கப்படுமானால் ஆரோக்கியமான நல்லதோர் சமூதாயத்தினைக் கட்டியெழுப்பமுடியும் என மண்முனை தென் எருவில் பற்று பிரதேசசபைத் தவிசாளர் ஞா.யோகநாதன் தெரிவித்தார்

களுதாவளைப் பிரதேசசபையின் ஏற்பாட்டில்  போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுப் பேரணி வெள்ளிக்கிழமை தவிசாளர் தலைமையில் நடைபெற்றபோது தலைமையுரையாற்றும் போது மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இந்தப் பேரணியில் பிரதேசசபை உறுப்பினர்கள் ஊழியர்கள் பொதுச்சுகாதார பரிசோதகர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

அவர் மேலும் பேசுகையில் போதைப்பொருள் பாவனை இன்று எமது நாட்டில் பாரிய  தாக்கம் செலுத்துகின்றது இதனால் பாடசாலை மாணவர்கள் முதல் பெரியோர்கள் வரைப் பாதிப்படையும் நிலை உருவாகி இருக்கின்றது. இதனை தடுத்து வளமான நாட்டையும் போதையற்ற சமூகத்தையும் உருவாக்கும் நோக்குடன் ஜனதிபதி முன்னெடுத்து இருக்கும் இவ் வேலைதிட்டம் சகல நிறுவனங்களிலும் முன்னிலைப்படுத்தப்பட்டடு சமூக மட்டத்தில் விழிப்பு ஏற்படுத்தப்பட்டு வருகின்றது.

மண்முனைத் தென் எருவில் பற்று பிரதேசசபைக்குட்பட்ட கிராமங்களின் அபிவிருத்திக்காக பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றோம் எங்களது ஆட்சிக்காலம் முடிவடைவதற்கு முன்பு பல்வேறு வேலைத்திட்டங்களை செய்து முடிக்க இருக்கின்றோம் என்றார்.


Related posts