காணி சீர்திருத்த ஆணைக்குழுவின்; விழிப்புணர்வு கருத்தரங்கு

மட்டக்களப்பு மாவட்டத்தில் களுவாஞ்சிகுடி (சூரையடி) எனும் கிராமத்தில் காணி சீர்திருத்த ஆணைக்குழுவிற்கு சொந்தமான காணியில் குடியிருக்கும் மற்றும் பயன் கொள்ளும் மக்களுக்கான உறுதிப்பத்திரத்தை பெற்றுக்கொள்வதற்கான விழிப்புணர்வு கருத்தரங்கு மட்டக்களப்பு மாவட்ட செயலககேட்போர் கூடத்தில் அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமான மாணிக்கம் உதயகுமார் தலைமையில்  (20) 9.30 மணியளவில் நடைபெற்றது.
 
இவ்விழிப்புணர்வு கருத்தரங்கானது விசேடமாக ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதுடன் காணி சீர்திருத்த ஆணைக்குழுவிற்கு சொந்தமான காணியில் குடியிருக்கின்ற அல்லது பயன் கொள்கின்ற மக்களுக்கு அக்காணிக்கான உறுதிப்பத்திரத்தை பெற்றுக்கொள்வதற்கான ஒரு விசேட அறிவூட்டலாக இது அமையும் என்றும் இவ்வாரான நிகழ்வுகள் நிச்சயம் மக்களுக்கு பயனுள்ளதாக அமையும் என்றும் அரசாங்க அதிபர் கருத்து தெரிவித்தார்.
 
இக்கருத்தரங்கில் காணி உரிமையாளர்களின் நியதி சட்டதிட்டங்கள் ,கடமைகள் மற்றும் பொறுப்புக்கள் பற்றியும் மக்கள் எதிர்நோக்கும் சவால்களுக்கான தீர்வுகள் பற்றிய விரிவான விடயங்களை மாவட்ட காணி சீர்திருத்த ஆணைக்குழு பணிப்பாளர் நேசகுமாரன் விமல்ராஜ் கருத்துரைத்தார்.
 
மேலும் தெரிவிக்கையில் விசேட ஏற்பாடு சட்டத்தின் முலம் காணி உச்ச வரம்பு சட்டத்திற்கமைய காணிகளை தம்வசம் வைத்திருப்பவர்களிடமிருந்து காணிகளைப்பெற்று காணியற்ற மக்களிற்கு பகிர்ந்தளிக்கும் செயற்பாடே எங்களின் அடிப்படை செயற்பாடு என்பது குறிப்பிடத்தக்கது.
 
இக்கருத்தரங்கில் மாவட்ட காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் அரச உத்தியோகத்தர்கள் மற்றும் பொது மக்கள் என பலர் கலந்துக்கொண்டனர்.
 
????????????????????????????????????
????????????????????????????????????

Related posts