காரைதீவில் இரண்டாம்கட்ட தடுப்பூசி வழங்கும் திட்டம் (29) வியரிக்கிழமை முதல் ஜருராக நடைமுறைப்படுத்தப்பட்டுவருகிறது .
30வயதுக்கு மேற்பட்ட அனைவரும் நேரஅட்டவணைக்கமைய தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்கிறார்கள் என்று காரைதீவு பிரதேச சுகாதாரவைத்தியஅதிகாரி டாக்டர் தஸ்லிமா பஷீர் அறிவித்துள்ளார்.
முதலாம்கட்டத்தில் 3900பேருக்கு சிறப்பாக தடுப்பூசி வழங்கியதன் காரணமாக இம்முறை 5000தடுப்பூசிகள் கிடைக்கப்பெற்றுள்ளது.எனவே அனைவருக்கும் தடுப்பூசிகள் கிடைக்கும் என அவர் மேலும் தெரிவித்தார்.
ஏலவே முதலாம்கட்ட தடுப்பூசி வழங்கப்பட்ட 6இடங்களுக்கு மேலதிகமாக விக்னேஸ்வரா வித்தியாலயத்தில் மக்களுக்கு தடுப்பூசி வழங்கப்பட்டது. (30) விபுலாநந்த மத்திய கல்லூரியிலும் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. என்று அவர் மேலும் சொன்னார்.