காரைதீவில் மினிசூறாவளி!

காரைதீவு  நிருபர் சகா

காரைதீவில் நேற்று(12) பிற்பகல் 2மணியளவில்மினிசூறாவளி வீசியுள்ளது. இதனால் பலத்தசேதங்கள் இடம்பெற்றுள்ளது.சூறாவளியைத்தொடர்ந்து ஒருமணிநேரம் பலத்தமழையும் பொழிந்தது.
 
மரங்கள் வீழ்ந்து முறிந்து சேதம் ஏற்பட்டதைவிட காரைதீவு பிரதேசசபை
அலுவலகத்தின் மேல்மாடியிலிருந்த கண்ணாடித்தொகுதி உடைந்து நொருங்கி கீழே
வீழ்ந்துள்ளது.திடீரென கண்ணாடி பாரிய சத்தத்துடன் வீழ்ந்தமையினால் அங்குள்ள ஊழியர்கள்அதிர்ச்சியடைந்தார்கள். அச்சத்துடன் வெளியே வந்துபார்த்தபோது
கும்மிருட்டாக இருந்தது.அதேபோல் பிரதேசசபையின் விபுலாநந்த கலாசார மண்டபத்தின் வரவேற்புஅறிவித்தல்(நிலையான இரும்புப் பதாதை) காற்றில் சுழற்றிவீசப்பட்டு அருகிலுள்ள
உயர்வலுவுள்ள மின்கம்பத்தில் வீழ்ந்துள்ளது.இதனால் அப்பகுதியெங்கும்
சிலமணிநேரம் மின்சாரம் தடைபட்டிருந்தது.
 
பிரதானவீதியிலிருந்த லொத்தர்சீட்டுகள் விற்கும் கூடுகள்
தூக்கிவீசப்பட்டன. வீதிஅருகேயிருந்த அங்காடிக்கடைகளின் தற்காலிக
கூடாரங்கள் தூக்கிவீசப்பட்டன. அங்கிருந்த உடுதுணிகளும் சுழல்காற்றில்
வீசப்பட்டன.

Related posts