காரைதீவு பிரதானவீதியில் அமைக்கப்படும் வடிகான் தொடர்பில் பொதுமக்கள் முறைப்பாடு: தவிசாளர் வீ.அ.அ.சபையுடன் பேச்சு!

 
காரைதீவு பிரதானவீதியில் தேவாலயத்திற்கு முன்பாக அமைக்கப்பட்டுவரும் பாரிய வடிகான் தொடர்பில் பொதுமக்கள் முறைப்பாடு தெரிவித்துள்ளனர்.
 
குறித்த வடிகானிலிருந்து வரும் தண்ணீர் இறங்கும் இடம் தொடர்பிலேயே இம்முறைப்பாடு தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
வீதியலிவழிந்தோடும் நீர் நேராக கோஸ்வேயினுள் இறக்கப்பட்டு ஒரு லீடர்வேயினால் உரிய இடத்திற்கு செலுத்தப்படவேண்டும். வருகின்றநீரில் மழைநீர்மட்டுமல்ல அசுத்தநீர் குப்பைகூழங்களும் வருவதற்கான சாத்தியப்பாடுகளுமுள்ளன. எனவே லீடர்வே அவசியம்.
 
ஆனால் இங்கு லீடர்வே இன்னும் அமைக்கப்படவில்லை. வயலுக்குள் இந்தநீரை நேரடியாக இறக்கிவிட்டால் விவசாயத்திற்கு பின்னர் ஆபத்தாக அமையலாமென மக்கள் கருதுகின்றனர்.
 
காரைதீவு பிரதேசசபைத் தவிசாளர் கி.ஜெயசிறிலிடம் மக்கள் தெரிவித்த முறைப்பாட்டையடுத்து அவர் அங்கு சென்று பார்வையிட்டார்.
 
வடிகானை நிருமாணித்துவரும் வீதி அபிவிருத்தி அதிகார சபை பொறியியலாளருடன் கலந்துரையாடியதன்பின்பு இதனை நிறுத்துவதா? தொடர்வதா? என்பது பற்றி முடிவெடுக்கமுடியுமென அவர் உறுதியளித்தார்.

Related posts