கிழக்கில் கடந்த 12மணி நேரத்தில் 13பேருக்கு கொரோனா!16 கொரோனா மரணங்கள்:மொத்தம் 2517 தொற்றுக்கள்!கல்முனை1233:மட்டக்களப்பு617:திருமலை484:அம்பாறை160.

கிழக்கு மாகாணத்தில் கடந்த 12மணி நேரத்தில் 13 பேருக்கு கொரோனா தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளது.
 
தமனவில் 2 , கல்முனை தெற்கு,  அட்டாளைச்சேனை ,  காரைதீவு,  சம்மாந்துறை ,  கல்முனைவடக்கு, ஏறாவுர், மட்டக்களப்பு, களுவாஞ்சிகுடி ,காத்தான்குடி, அம்பாறை, பதியத்தலாவ ஆகியபிரதேசங்களில் தலா ஒருவருமாக  என 13தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.
 
இதேவேளை கிழக்கில் 16வது மரணம் சம்பவித்துள்ளது.  கல்முனைப்பிராந்தியத்தில் 8வது மரணம் இதுவாகும்.
 
கிழக்கு மாகாணத்தில்  கொரோனாத்தொற்றுக்களின் எண்ணிக்கை 2500ஜ அணமித்துள்ளது.அங்கு நேற்றையதினம்(05)வெள்ளிக்கிழமை  2517 ஆகியது.
அதேவேளை கல்முனைப்பிராந்தியம் 1200ஜத் தாண்டி 1233ஆகியது.
 
கல்முனைப்பிராந்தியத்துள் வரும் அக்கரைப்பற்று பிரதானசந்தை மூலமாக ஏற்பட்ட உபகொத்தணிப்பரவலும்; 1100த்தாண்டியது. அந்த உப கொத்தணியில் இதுவரை  1176பேர் இனங்காணப்பட்டுள்ளனர்.
 
கடந்த மார்ச் மாதமிருந்து  பேலியகொட மூலமாக இதுவரை கல்முனை பிராந்தியத்தில் 1233பேரும் ,    மட்டக்களப்பு மாவட்டத்தில் 617பேரும், திருமலை மாவட்டத்தில் 484 பேரும், அம்பாறை பிராந்தியத்தில் 160பேருமாக 2494பேர்  தொற்றுக்கிலக்காகியுள்ளனர்.
 
மேலும் வெளிநாடு ,மினுவாங்கொட, கந்தக்காடுகொத்தணி, வெலிசற கடற்படைமுகாம் போன்ற மூலங்களிலிருந்து மீதி 23 தொற்றுக்கள் இனங்காணப்பட்டுள்ளன.
 
 
16மரணங்கள்!
இதுவரை கிழக்கில் சம்மாந்துறை ஒலுவில் சாய்ந்தமருது  அட்டாளைச்சேனை வவுணதீவு காத்தான்குடி நாவிதன்வெளி  ஆலையடிவேம்பு உகனை  காத்தான்குடி மற்றும் மட்டக்களப்பிலுமாக மொத்தம்  16 கொரோனா மரணங்கள் சம்பவித்திருக்கின்றன.
 
அதிகூடிய 04மரணங்கள் சாய்ந்தமருதில் சம்பவித்துள்ளது.
கல்முனைப்பிராந்தியத்தில் 08பேரும், மட்டக்களப்பு மாவட்டத்தில் 06பேரும், அம்பாறைப்பிராந்தியத்தில் இருவருமாக இந்த 16 மரணங்கள் சம்பவித்திருக்கின்றன.
 
இத்தரவுகளை  கிழக்குமாகாண சுகாதாரத்திணைக்களம் வெளியிட்டுள்ளது

Related posts