கிழக்கு மாகாணத்தில் கொரோனா காரணமாக மரணித்தோரும் எண்ணிக்கை 200ஐக் கடந்துள்ளது. நேற்று(10)வியாழன்காலை வரை மொத்தமாக 202பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.
இந்த 202 பேரில் மூன்றாவது அலையில் மரணித்தவர்களின் எண்ணிக்கை 176ஆகும்.
கிழக்கில் இதுவரை பலியான 202பேரில் திருகோணமலை மாவட்டத்தில் அதிகூடிய 111பேரும் மட்டக்களப்பு மாவட்டத்தில் 50 பேரும் கல்முனைப்பிராந்தியத்தில் 22 பேரும் அம்பாறைப்பிராந்தியத்தில் 19 பேரும் மரணித்துள்ளனர்.
இதுவரை 16500 தடுப்பூசிகள்!
இதேவேளை கிழக்கில் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டுக்கொண்டிருக் கின்றன. இதுவரை 16477 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன என மாகாண சுகாதாரசேவைப்பணியகம் தெரிவித்துள்ளது.
திருகோணமலை மாவட்டத்தில் அதிகூடியதாக அம்பாறைப்பிராந்தியத்தில் 7583 பேருக்கும் மட்டக்களப்பு மாவட்டத்தில் 5052 பேருக்கும் திருகோணமலை மாவட்டத்தில் 3560 பேருக்கும் இதுவரை செலுத்தப்பட்டுள்ளது.
கல்முனைப்பிராந்தியத்திற்கு விரைவில் தடுப்பூசி கிடைத்ததும் அந்நடவடிக்கை அங்கு முன்னெடுக்கப்படுமென பணிப்பாளர் டாக்டர் எ.ஆர்.எம்.தௌபீக் தெரிவித்தார்.
6975 தொற்றுக்கள்!
கிழககில் மூன்றாவது அலையின்போதான தொற்றுக்களின் எண்ணிக்கை 7ஆயிரத்தை அண்மித்துள்ளது.அங்கு மூன்றாவது அலையில் இதுவரை 6975பேருக்கு கொரொனாத்தொற்று ஏற்பட்டுள்ளது.
மூன்றாவது அலையில் திருகோணமலை மாவட்டத்தில் அதிகூடிய 2694பேரும் அம்பாறைப்பிராந்தியத்தில்1346 பேரும் மட்டக்களப்பு மாவட்டத்தில் 2484 பேரும் கல்முனைப்பிராந்தியத்தில் 451 பேரும் தொற்றுகுள்ளாகியுள்ளனர்.