கிழக்கு மாகாணத்தில் கொரோனாத்தொற்றுகளின் எண்ணிக்கை நான்கு சதத்தையும் தாண்டியது. இங்கு தொற்றானது நாளுக்குநாள் அதிகரித்துச்செல்கிறது. கிழக்கில் இதுவரை 441 பேர் தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
அதேவேளை கல்முனைப்பிராந்தியத்தில் 290பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். அந்தப்பிராந்தியத்தில் புதிதாக உருவான அக்கரைப்பற்றுக் கொத்தணி மூலமாக இதுவரை 255பேருக்கு கொரோனா தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளது. இவ் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம்.
கல்முனைப்பிராந்தியத்தில் புதிதாக அட்டாளைச்சேனையில் திடீர் அதிகரிப்பு காணப்பட்டுள்ளது. அங்கு இதுவரை 22பேர் தொற்றிலுள்ளனர்.
இவர்களில் மினுவாங்கொட கொத்தணி மற்றும் ஏனைய இடங்கள்மூலமாக 23பேரும் பேலியகொட கொத்தணி மூலமாக 418 பேரும் தொற்றுக்கிலக்காகியிருந்தனர். இறுதியாக அக்கரைப்பற்றில் 11பேரும் ஆலையடிவேம்பில் 3பேரும் உப்புவெளியில் மூவமாக இனங்காணப்பட்டுள்ளனர்.
இதுவரை கிழக்கில் பேலியகொட கொத்தணி மூலமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் 95பேரும் கல்முனை பிராந்தியத்தில் 290பேரும் திருமலை மாவட்டத்தில் 18பேரும் அம்பாறை பிராந்தியத்தில் 15பேரும் தொற்றுக்கிலக்காகியுள்ளனர்.
கிழக்கில் தற்போதைய நிலைவரப்படி கல்முனைப்பிராந்தியம் 290தொற்றுக்களுடன் முன்னிலைவகிக்கிறது.அதிலும் புதிதாக உருவான அக்கரைப்பற்று கொத்தணி 255 அதிகூடுதலான தொற்றுக்களை கொண்டிருக்கிறது. கிழக்கிலே அதிகூடிய தொற்றுள்ள தனியொருபிரதேசமாக அக்கரைப்பற்று மாறியுள்ளது.
அக்கரைப்பற்றுக்கொத்தணிக்குள் அக்கரைப்பற்றில் மாத்திரம் 201பேருக்கு இதுவரை அதிகூடிய தொற்று உறுதிசெய்யப்பட்டிருக்கின்றன. அடுத்ததாக வாழைச்சேனை கோறளைப்பற்று மத்திபிரிவில் அதிகூடிய தொற்றுக்கள் 60 இனங்காணப்பட்டிருந்தன.அடுத்தபடி யாக சாய்ந்தமருதில 14பேரும் ஆலையடிவேம்பில் 11பேரும் இறக்காமத்தில் 11பேரும் ஏறாவூரில் 10பேரும் இனங்காணப்பட்டிருந்தனர்.
சிகிச்சை நிலையங்களில் 1402 அனுமதி
கிழக்கிலுள்ள ஜந்து கொரோனா சிகிச்சை நிலையங்களில் தற்போது 323கொரோனாத் தொற்றாளர்கள் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
நேற்று (08.12.2020) நண்பகல் வரை 1402பேர் மேற்படி 5 வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு அவர்களில் 1072பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.07பேர் இடமாற்றப்பட்டுள்ளனர்.இன்னும் 140கட்டில்கள் எஞ்சியுள்ளன.
காத்தான்குடி சிகிச்சை நிலையத்தில் நேற்றுவரை 513பேர் அனுமதிக்கப்பட்டு 440பேர் குணமடைந்து வெளியேறியதால் தற்போது 69பேர் தங்கியிருந்து சிகிச்சைபெற்று வருகின்றனர். நால்வர் இடமாற்றப்பட்டிருந்தனர்..இன்னு ம் 51கட்டில்கள் எஞ்சியுள்ளது.
மேலும் கரடியனாறு சிகிச்சை நிலையத்தில் 26 பேரும் பதியத்தலாவ சிகிச்சை நிலையத்தில் 68பேரும் பாலமுனை சிகிச்சை நிலையத்தில் 83 பேரும் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
17583பேருக்கு பிசிஆர் பரிசோதனை
இதுவரை கிழக்கில் 17583பேருக்கு பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருந்தது.இவற்று ள் அக்கரைப்பற்று கொத்தணிப்பகுதியில் மட்டும் 6014 பிசிஆர் அன்ரிஜன்ற் சோதனை நடாத்தப்பட்டது.
கல்முனைப்பிராந்தியத்தில் 7881 சோதனைகளும் மட்டக்களப்பில் 6300 சோதனைகளும் அம்பாறையில் 1878சோதனைகளும் திருகோணமலையில் 1524சோதனைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.