கிழக்கு மாகாண ஆளுனர் ஹிஸ்புல்லாஹ்வின் நியமன விடயத்தில் கருணா அம்மான் சம்பந்தன் ஐயாவையும் சுமந்திரனையும் குற்றம் சாட்டிவருவது வேடிக்கையானது.ஆளுனரை நியமதித்தது பிரதமர் ரணில் விக்ரமசிங்க அல்ல.அவரது கட்சியின் தலைவரான ஜனாதிபதியே. இவ்வாறு கிராமிய பொருளாதார அபிவிருத்தி மற்றும் விவசாய நீர்ப்பாசன இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்.
வெல்லாவெளியில் இடம்பெற்;ற வறுமைக் கோட்டின்கீழ் வாழும் மக்களுக்கு வாழ்வாதார உதவிகள் வழங்கும் வைபவத்தில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு பேசும்போதே இவ்வாறு தெரிவித்தார்.குறித்த வைபவத்தில் முன்னாள் பிரதியமைச்சரும் ஐக்கிய தேசிய கட்சி பட்டிருப்பு தொகுதி அமைப்பாளருமான சோ.கணேசமூர்த்தி இராஜாங்க அமைச்சரின் இணைப்பாளர் ஜோன் பாஸ்டர் உட்பட பல பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.
இங்கு தொடர்ந்து பேசிய இராஜாங்க அமைச்சர்–கருணா அம்மான் முன்னாள் ஜனாதிபதி மஹிந்;த ராஜபக்ஸவின் செல்லப்பிள்ளை.அவரது மடிகளிலேயே கருணா உள்ளார்.இவரது கட்சியின் தலைவர் பிரதமரல்ல.ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆவார்.அவரே கிழக்கு மாகாண ஆளுனரை நியமித்தார்.இதை விடுத்து தமிழ் தேசிய கூட்டமைப்பு மீதும் சம்பந்தன் ஐயா மீதும் சுமந்திரன் மீதும் அவர் குற்றம் சுமத்துவது எந்த வகையில் நியாயமாகும்?
வெறமனே இன வாதத்தை விதைப்பதனூடாக எதையுமே அறுவடை செய்யமுடியாது.கிழக்கு அதிலும் குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டம் தமிழ் முஸ்லிம் சமுகங்கள் காலம் காலமாக ஒன்றித்து வாழுகின்ற மாவட்டம்.இங்கு இரு சமுகமும் இரு கண்களைப் போன்றவை.ஒன்றை ஒன்று பிரிந்து ஒரு காலமும் நிம்மதியாக வாழ முடியாது.
தேவை ஏற்படும் போது தமக்கு ஆதாயம் தேவைப்படும்போது சில அரசியல் வாதிகள் இனங்களிடையே முறுகலை உண்டு பண்ணி ஆதாயம் தேட முனைவது தொடர்ந்தேர்ச்சியாக நடந்து வருகின்ற விடயங்கள். இது குறித்து தமிழ் முஸ்லிம் சமுகங்கள் விழிப்புடன் இருக்கவேண்டும்.என மேலும் தெரிவித்தார்.