மட்டக்களப்பு வெல்லாவெளி பொலிஸ் பிரிவிலுள்ள றாணமடு மலையார்கட்டு வயல் பிரதேசத்தில் வயலுக்குச் சென்ற விவசாயி ஒருவர் வயலின் நீர் ஓடும் வாய்காலிவல் கைகள் கட்டப்பட்ட நிலையில் சடலமாக நேற்று திங்கட்கிழமை (11) இரவு மீட்கப்பட்டதுடன் சந்தேகத்தில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வெல்லாவெளி பொலிசார் தெரிவித்தனா.
வெல்லாவெளி றாணமடு பிரதேசத்தைச் சேர்ந்த 62 வயதுடைய விவசாயியான கணவதிப்பிள்ளை திருநாவுக்கரசு என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இதுபற்றி தெரியவருவதாவது
குறித்த பிரதேசத்தைச் சேர்ந்த கணவதிப்பிள்ளை திருநாவுக்கரம் அவரது மருமகன் சம்பவதினமான ஞாயிற்றுக்கிழமை மாலை 2 மணிக்கு தமது வயலுக்கு இரு மோட்டார் சைக்கிளில் சென்று அதனை வயல் பாதையில் நிறுத்திவிட்டு தமது வயல் சுற்றிப் பார்த்துவிட்டு வீடு திரும்புவதற்காக மாலை 5 மணியளவில் மோட்டார் சைக்கிள் நிறுத்தி வைக்கப்பட்ட இடத்திற்கு வந்தபோது அவர்களின் இரு மோட்டார் சைக்கிளை மூவர் கொண்ட குழு தாக்கி சேதப்படுத்திவிட்டு தப்பியோடிய போது அதில் ஒருவரை அவர்கள் அடையாளம் கண்டுள்ளனர்.
இந்த நிலையில் மாமனாரின் மோட்டார் சைக்கிள் ஒட்டிச் செல்லும் அளவிற்கு இருந்ததையடுத்து அவரை மருமகள் அவரின் வீடு செல்லும்படி தெரிவித்துவிட்டு ஒடமுடியாத நிலையில் இருந்த தனது மோட்டார் சைக்கிளை வீதிக்கு கொண்டுவந்து உழவு இயந்திரத்தில் ஏற்றிக் கொண்டு வீட்டுக்குச் சென்று மோட்டார் சைக்கிளை அங்கு இறக்கி வைத்துவிட்டு பொலிஸ் நிலையத்துக்கு சென்று தனது மற்றும் மாமானாரின் மோட்டார் சைக்கிளை 3 பேர் கொண்ட குழு அடித்து சேதப்படுத்திதாக முறைப்பாடு தெரிவித்தார்.
இதனையடுத்து மருமகள் மாமனாரின் வீட்டுக்குச் சென்ற போது அவர் வீடுதிரும்ப வில்லை என அறிந்த நிலையில் மாமனாரை காணவில்லை என உடனடியாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு தெரிவித்தாh.
இதனைத் தொடர்ந்து திங்கட்கிழமை காலையில் கிராம மக்கள் பொலிசாருடன் ஒன்றினைந்து காணாமல் போனவரை தேடும் நடவடிக்கையில் ஈடுபட்ட நிலையில் வயல் பகுதியில் காணாமல் போனவரின் மோட்டார் சைக்கிள் தலைக்கவசம் இருப்பதை கண்டுபித்தனர்.
பொலிசார் மேப்பநாய் வரவழைக்கப்பட்டு தேடுதலில் ஈடுபட்ட நிலையில் காணாமல் போனவரை கண்டுபிடிக்க முடியவில்லை இந்த நிலையில் பொலிசாருக்கு கிடைத்த தகவல் அடிப்படையில் இந்த சம்பவத்தில் தொடர்புடைய ஒருவரை சந்தேகத்தில் கைது செய்து விசாரணையில் மோட்டார் சைக்கிள் மீட்கப்பட்ட பகுதியில் இருந்து சுமார் ஒரு கிலோமீற்றர் தூரத்தில் வயலில் நீர் ஓடும் வாய்காலில் நீர் தேங்கி நிற்கும் பகுதியில் உள்ள போக்கினுள் கைகள் கட்டப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.
இதனை தொடர்ந்து சந்தேகத்தில் இன்னொருவர் உட்பட இருவரை கைது செய்ததுடன் குறித்த விவசாயிக்கும் இவர்களுக்குமிடைய இடம்பெற்று வந்த வயல் காணிப் பிரச்சனை காரணமாக விவசாயின் கைகளை கட்டி அவரை தண்ணீரில் மூழ்கடித்து கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிசாரின் ஆரம்ப விசாரணயில் தெரியவந்துள்ளது .
இதேவேளை மீட்கப்பட்ட சடலம் பிரேத பரிசோதனைக்காக மட்டு போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.என பொலிசார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வெல்லாவெளி பொலிசார் மேர்கொண்டுவருகின்றனர்