வரலாற்றுப்பிரசித்திபெற்ற கதிர்காமம் கந்தனாலயத்தின் ஆடிவேல்விழா உற்சவத்தின் போதான கொத்து பந்தல் இடும் பாரம்பரிய நிகழ்வு (15)ஆறாம்நாள் திருவிழாவின்போது சிறப்பாக இடம்பெற்றது.
ஆறாம் நாள் திருவிழா ஆரம்பத்தில் யானைகள் கொத்துக்களை சுமந்து வந்து பந்தல் இடும் பாராம்பரிய நிகழ்வு இடம்பெற்றது. இது பலரையும் ஈர்த்தது.
கதிர்காமம் கந்தனாலயத்தின் ஆடிவேல்விழா உற்சவம் கடந்த 10ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது. ஆடிவேல்விழா எதிர்வரும் 25ஆம் திகதி தீhத்தோற்சவத்துடன் நிறைவடையவிருக்கிறது.
மட்டுபப்டுத்தப்பட்ட பக்தர்களுடன் சுகாதார முறைப்படி கதிர்காம ஆடிவேல்திருவிழா இடம்பெற்றுவருகிறது.