ஆடி அள்ளித்தரும் நன்மைகள் கோடி!இன்று ஆடிப்பிறப்ப : ஆடி மாதச்சிறப்புகள்!

தமிழ் மாதங்களில் ஆடி மாதம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. ஆடி மாதத்தை அடிப்படையாக வைத்துதான் பல சுப நிகழ்ச்சிகளை முன்னோர்கள் நடத்தினர். ஆடியை ‘கற்கடக மாதம்’ என்றும் அழைக்கிறார்கள்.
 

இன்று(17) ஆடி பிறக்கிறது. இதனை ஆடிப்பிறப்பு என்பர். ஆடிமாதத்திலே முருகானலயங்களில் ஆடிவேல் விழா நடப்பதும் ஆடிஅமாவாசை தீர்த்தம் இடம்பெறுவதும் தெரிந்தவையே.

மாதங்களைப் பொறுத்தவரை உத்ராயணம் தஷ்ணாயணம் என இரு பிரிவுகள் உள்ளது. இதில் தஷ்ணாயணம் புண்ணிய காலம் ஆடி மாதத்தில் துவங்குகிறது.  ஆடி முதல் மார்கழி வரை தஷ்ணாயண காலமாகவும்இ தை முதல் ஆனி வரை உத்தராயணம் என பிரிக்கப்பட்டுள்ளது. சூரியனின் பாவன இயக்கத்தை  (வடகிழக்கு தென்கிழக்கு) வைத்து இது வரையறுக்கப்படுகிறது.
தஷ்ணாயணம் துவக்கும் ஆடி மாதத்தில் சூரியனில் இருந்து சூட்சும சக்திகள் வெளிப்படும். வேத பாராயணங்கள் மந்திரங்கள் ஜெபங்கள் மாந்த்ரீகம் ஆகியவற்றிற்கு ஆடி மாதம் சிறந்ததாக கருதப்படுகிறது. பிராண வாயு அதிகமாக கிடைப்பதும் ஆடியில்தான். ஜீவ ஆதார சக்தி அதிகம் உள்ள மாதமாகவும் இது  கருதப்படுகிறது.
 
ஆடி மாதத்தை சக்தி மாதம் என்றும் அழைக்கப்படுகின்றன. எனவே இந்த மாதத்தில் விதை விதைப்பதை முன்னோர்கள் மேற்கொண்டனர். ‘ஆடிப் பட்டம் தேடி  விதை’ என்ற பழமொழி உருவானதற்கும் இதுவே காரணம். உத்ராயண காலத்தில் சூரியனில் இருந்து வெளிப்படும் கதிர்களை விட தஷ்ணாயண காலத்தில்  (ஆடி) சூரியனின் ஒளிக் கதிர்கள் விவசாயத்திற்கு உகந்ததாக இருக்கும்.
 
சுற்றுப்புறத்தை தூய்மையாக்கி தெய்வங்களை (அம்மன்) வழிபட்டு உள்ளுணர்வை மேம்படுத்திக் கொள்ளவும் ஆடி மாதம் பயன்படுகிறது. வேப்பிலையை  அம்மனுக்கு சாத்தி வணங்குவதும்இ கூழ் ஊற்றும் விழா நடத்துவதும் ஆடி மாதத்தில் நடக்கிறது. இதற்கு காரணம் ஆடி மாதத்தில் கிடைக்கும் வேப்பிலைக்  கொழுந்துகளுக்கு அபார மருத்துவ தெய்வீக குணம் உண்டு.
 
ஆடி மாதத்தில் பொதுவாகவே காற்று அதிகமாக வீசும். அந்தக் காலத்தில் எளிதில் ஜீரணிக்கக் கூடிய வகையிலான உணவுகள் (கூழ்) சாப்பிடுவது நல்லது. இதனால் ஆரோக்கியம் மேம்படும்.

 ஆடி மாத மகிமைகள்

ஆடி மாதம் தமிழ் நாட்காட்டியின் நான்காவது மாதமாகும். ஆடி மாதம் மிக முக்கியமான மாதங்களில் ஒன்று என்று கூறலாம்.

தெய்வீக சக்தியுடன் நம்மை இணைத்துக்கொள்ள ஆடி மாதம் உகந்த மாதமாக கருதப்படுகின்றது.

ஆடி மாதத்தில் அநேகமாக அனைத்து அம்மன் கோயில்களிலும் சிறப்பு வழிபாடுகளும் பூஜைகளும் ஏற்பாடு செய்யப்பட்டு விமரிசையாக நடத்தப்படுகின்றன. தெய்வீக சக்தியுடன் நம்மை இணைத்துக்கொள்ள ஆடி மாதம் உகந்த மாதமாக கருதப்படுகின்றது.
 
. இந்த மாதத்தில் விரதமிருந்து அம்மன் கோயில்களில் தங்கள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுபவர்களின் வேண்டுதல் நிச்சயமாக நிறைவேறும் என்று நம்பப்படுகின்றது.
பொதுவாக ஆடி மாதத்தில் வரும் அனைத்து செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளும் மிகவும் புனிதத்தன்மை வாய்ந்தவையாகக் கருதப்படுகின்றன. இந்நாட்களில்இ பெண்கள் தங்கள் வீடுகளில் பூஜை செய்து மற்ற பெண்களுக்கு வெற்றிலை பாக்கு தாம்பூலம் அளிப்பது வழக்கம்.
 
ஆடி மாதத்தில் வரும் நல்ல நாட்கள்
இந்த மாதத்தில் கொண்டாடப்படும் சில முக்கியமான பண்டிகைகள் பின்வருமாறு:

ஆடிப்பிறப்பு: ஆடி மாதத்தின் முதல் நாள் ஆடிப் பண்டிகை அல்லது ஆடிப்பிறப்பு என்று கொண்டாடப்படுகின்றது.இன்று அந்த ஆடிப்பிறப்பு கொண்டாடப்படுகின்றது. ‘ஆடிப்பிறப்பிற்கு நாளை விடுதலை ஆன்நதம் ஆனந்தம் தோழர்களே!’ என்று பாடக் கேட்டிருக்கிறோம். தமிழகத்தில் மட்டுமல்லாமல் இலங்கையிலும் தமிழர்களுக்கு மத்தியில் ஆடிப்பிறப்பு மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றது.

வரலட்சுமி அம்மன் விரதம்: லட்சுமி தேவிக்கு அர்ப்பணிக்கப்பட்ட முக்கியமான பூஜைகளில் ஒன்றான வரலட்சுமி பூஜை ஆடி மாதத்தில் ஒரு வெள்ளிக்கிழமை செய்யப்படுகிறது. இந்த நாளில் வரலட்சுமி அம்மனுக்கு பூஜை செய்யப்பட்டு பிரசாதங்கள் அளிக்கப்ப்டுகின்றன.

ஆடிப்பெருக்கு: ஆடிப்பெருக்கு அல்லது பதினெட்டாம் பெருக்கு என்று அழைக்கப்படும் இந்த விழா ஆடி மாதத்தின் 18 ஆம் நாள் கொண்டாடப்படுகின்றது.இவ்வருடத்திற்கான ஆடிப்பெருக்கு அடுத்தமாதம் 3ஆம் திகதி (03.08.2021) கொண்டாடப்படுகின்றது.
நல்ல மழைக்கும் வளமான பயிருக்கும் செழிப்பான விளைச்சலுக்கும் மக்கள் கடவுளை வேண்டும் நாளாகும் சொந்தங்களுடனும் நண்பர்களுடனும் ஆற்றங்கரையிலேயே உணவுண்டு பேசி மகிழும் நாளாகும் இது.

ஆடிப்பூரம்: ஆடிப்பூரம்  ஆண்டாள் நாச்சியாரின் பிறந்த நட்சத்திரத்தைக் குறிக்கும் திருவிழாவாகும். .இவ்வருடத்திற்கான ஆடிப்பூரம்  அடுத்தமாதம் 11ஆம் திகதி (11.08.2021) கொண்டாடப்படுகின்றது.இந்நாளில் சூடிக் கொடுத்த சுடர்கொடி கோதைக்கு கோயில்களில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு பெண்களுக்கு வளையல்கள் வழங்கப்படுகின்றன.

ஆடிக்கிருத்திகை: ஆடிக்கிருத்திகை
 தமிழ்க் கடவுள் முருகனுக்கு உகந்த நாளாகும். முருகனை வளர்த்த கார்த்திகைப் பெண்களை பெருமைப்படுத்தும் வகையில் இந்நாள் கொண்டாடப்படுகின்றது. இந்த நாளில் முருகனுக்கு விரதமிருந்து வணங்குவோரை எந்த வினையும் அண்டாது.
ஆடி  வெள்ளி
ஆடி மாத வெள்ளிக் கிழமைகளில் மகாலட்சுமியை வழிபட்டால் வீட்டில் செல்வம் சேரும். ஆடி மாதம் ஏதாவது ஒரு வெள்ளிக்கிழமை அம்மனை ஆவாகனம் செய்து வீட்டுக்கு வரவழைத்து வழிபடுவது சிறப்பை தரும். ஆடி மாதம் குத்துவிளக்கை லட்சுமியாக பாவித்து அலங்கரித்து வழிபடுதல் வேண்டும்.
 
ஆடி மாத வெள்ளிக் கிழமைகளில் அதிகாலையில் எழுந்து குளித்து தூய ஆடை அணிந்து சாணத்தைப் பிள்ளையாராகப் பிடித்து செவ்வரளி செம்பருத்திஅறுகு கொண்டு சூர்யோதயத்திற்கு முன்னர் விநாயகரை பூஜிக்க வேண்டும். வாழையிலை மீது நெல்லைப்பரப்பி அதன் மீது கொழுக்கட்டை வைத்து விநாயகரை வழிபட செல்வம் கொழிக்கும்.
இதைவிட ஆடிப்பட்டம் என்பார்கள். ஆடியிலே பட்டம் விடுவதற்கு உகந்தகாலமாகும். ஆடித்தள்ளுபடி என்று வர்த்தகத்துறையினரும் ஆடியைச்சிறப்பிப்பதுண்டு.
 
ஆடிமாதத்திலே முருகானலயங்களில் ஆடிவேல் விழா எதிர்வரும் 25ஆம் திகதி பூரணையன்று நடைபெறும். கதிர்காமம் உகந்தமலை முருகனாலயங்கள் உள்ளிட்ட முருகனாலயங்களில் கடந்த 10ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமான இவ் ஆடிவேல்விழா எதிர்வரும் 25ஆம் திகதி தீhத்தோற்சவத்துடன் நிறைவடையவிருக்கிறது. அதேபோல் ஆடிஅமாவாசை தீர்த்தம் எதிர்வரும் ஆகஸ்ட் 8ஆம் திகதி இடம்பெறவிருக்கிறது திருக்கோவில் சித்திரவேலாயுதசுவாமி ஆலயம் போன்ற ஆலயங்களில் தந்தையர்க்கு பிதிர்க்கடன் செலுத்தும் இந்த ஆடிஅமாவாசை தீர்த்தோற்சவம் நடைபெறுவதும் தனிச்சிறப்பே .

( வி.ரி.சகாதேவராஜா)

Related posts