கொரோனா காலகட்டத்தில் மனைப் பொருளாதார போசணையை மேம்படுத்தி குடும்ப அலகினை வலுவூட்டும் வீட்டுத்தோட்டச்செய்கையை ஊக்குவிக்கும் பொருட்டு அதற்கான உள்ளீடுகளை வழங்கிவைக்கும் நிகழ்வு நாடளாவியரீதியில் நடைபெற்றுவருகிறது.
சம்மாந்துறை மலையடிக்கிராமம்-02 கிராமசேவையாளர் பிரிவில் மனைப் பொருளாதார போசணையை மேம்படுத்தி குடும்ப அலகினை வலுவூட்டும் தேசிய வீட்டுத்தோட்ட பயிர்ச் செய்கைத் திட்டம் 2020/2021 – பெரும்போக பயிர்க் கன்றுகள் பயிர் விதைகள் வழங்கி வைக்கும் நிகழ்வு நேற்று நடைபெற்றது.
ஹிஜ்றா வலைய சமூர்த்தி முகாமையாளர் ஏ.எல்..முஹமட் தம்பி தலைமையில் இடம் பெற்ற இந் நிகழ்வில் சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல்.முஹம்மத் ஹனீபா தலைமை காரியாலய சமூர்த்தி முகாமையாளர் யு.எல்.எம்.சலீம் வலய உதவி முகாமையாளர் எம்.எம்.தமீம் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.எகீனா பீவீ கிராம சேவை உத்தியேகத்தர் எ.எல்..பாஸிறா அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.ஜ.றியானா ஆகியோர் கலந்து கொண்டனர்.
தக்காளி, கத்தரி, மிளகாய், கறி மிளகாய் மற்றும் நாற்றுக்கள் என்பன தெரிவுசெய்யப்பட்ட குடும்பங்களுக்கு வழங்கி வைக்கப்பட்டன.