கொவிட்டுக்கு மத்தியில் கோமாரியில்கோடியில் வீதி புனரமைப்பு!

ஜனாதிபதியின் 1லட்சம் கிலோமீற்றர் வீதி அபிவிருத்திட்டத்தின்கீழ் நேற்று(21)வெள்ளிக்கிழமை கோமாரிப்பிரதேசத்தில் 5கோடி ருபா செலவில் 2கிலோமீற்றர் கொங்கிறீட் வீதியாக செப்பனிடும் பணி ஆரம்பித்துவைக்கப்பட்டிருக்கிறது.
 
சமகால கொவிட் தொற்றுக்கு மத்தியில் பொத்துவில் பிரதேசசபைக்குட்பட்ட கோமாரிப்பிரதேசத்தில் காளிகோவில் வீதியே இவ்விதம் கொங்கிறீட் விதியாக மாற்றம் காணவிருக்கிறது.

கோமாரிப்பிரதேசத்திற்கான பொத்துவில் த.தே.கூட்டமைப்பு பிரதேசசபை உறுப்பினர் த.சுபோதரனின் வேண்டடுகோளுக்கிணங்க பொதுஜனபெரமுனவின் பொத்துவில் தொகுதி அமைப்பாளரும், பிரதேசசபைஉறுப்பினருமான எ.எம்.அப்துல் மஜீத் மற்றும் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எம்.வீரசிங்க ஆகியோரின் முயற்சியால் இந்நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

நேற்று(21)வெள்ளிக்கிழமை காலை வீதி செப்பனிடும் பணி ஆரம்பித்தவைக்கப்பட்டது. கோமாரிப்பிரதேசத்திற்கான பொத்துவில் த.தே.கூட்டமைப்பு பிரதேசசபை உறுப்பினர் த.சுபோதரன்,  பொதுஜனபெரமுனவின் பொத்துவில் தொகுதி அமைப்பாளரும், பிரதேசசபைஉறுப்பினருமான எ.எம்.அப்துல் மஜீத் பொத்துவில் பிரதேசசபைத்தவிசாளர் எம்.எச.அப்துல் றஹீம் உறுப்பினர் எ.எல்.எம்.மர்சூக் ஆகியோர் அந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
 
நீண்டகாலமாக பராமரிக்கப்படாமல் மேடும் பள்ளமுமாக இருந்த கிறவல் வீதியே, உறுப்பினர் சுபோதரனின் முயற்சியால் தற்போது கொங்கிறீட்வீதியாக மாற்றம் காணுகின்றது.

Related posts