செயணிக் கூட்டம்.-பிரதேச செயலாளரின் தலைமையில் இறுக்கமான தீர்மானங்கள்

திருக்கோவில் பிரதேச கொவிட்19 கட்டுப்பாட்டு செயணிக் கூட்டம்.
-பிரதேச செயலாளரின் தலைமையில் இறுக்கமான தீர்மானங்கள்-
 
நாட்டில் நாளை முதல் அமுல்படுத்தப்படவுள்ள பயணக்கட்டுப்பாடுகளை முன்னிட்டு திருக்கோவில் பிரதேசத்தில் முன்னெடுக்கப்ட வேண்டிய கொவிட் 19 தடுப்பு வழிமுறைகள் தொடர்பாக இன்று திருக்கோவில் பிரதேச கொவிட் 19 கட்டுப்பாட்டு செயலணிக் கூடி பல தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளனர்.
 
இவ் திருக்கோவில் பிரதேச கொவிட் 19 கட்டுப்பாட்டு செயலணிக் குழு கூட்டமானது திருக்கோவில் பிரதேச செயலாளர் ரீ.கஜேந்திரன் தலைமையில் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இன்று வெள்ளிக்கிழமை (21) இடம்பெற்று இருந்தன.
 
இதன்போது பயணக்கட்டுப்பாட்டு காலங்களில் திருக்கோவில் பிரதேச மக்களுக்கான உணவுப் பொருட்களை விநியோகித்தல் விவசாயிகள் கால்நடை வளர்ப்பாளர்கள் மற்றும் மீன் மரக்கறி விற்பனைகளில் ஈபடுகின்ற வியாபாரிகள்  மற்றும் அத்தியாவசிய மற்றும் மருத்துவ  தேவைகளுக்காக வெளி பிரதேசங்களுக்கு செல்லுதல் போன்ற நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்தலின் ஊடாக  அனுமதிகளை வழங்குதல் போன்ற தீர்மானங்கள் எடுக்கப்பட்டு இருந்தன.
 
இதேவேளை பயணக்கட்டு காலங்களின் தேவைகளின் அடிப்படையில் பிரதேச செயலாளர் சுகாதார வைத்திய அதிகாரி மற்றும் வைத்திய அத்தியட்சகர் கிராம சேவை உத்தியோகத்தர்களின் கையொப்பங்களின் ஊடாக வழங்கப்படும் பயண அனுமதி அட்டைகளை பெற்று செல்ல வேண்டும் போன்ற இறுக்கமாக தீர்மானங்கள் எடுக்கப்பட்டு இருந்தன.
 
இதேவேளை முககவசம் அணியாது வீதிகளில் செல்லும் நபர்களை அன்ரீஜன் பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளதுடன் தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறிய குற்றச்சாட்டின் கீழ் குறித்த நபர்கள் பொலிசாரினால் கைது செய்ப்படுவார்கள் எனவும் இவ் செயலணிக் கூட்டத்தில் பல இறுக்கமான தீர்மானங்கள் எட்டப்பட்டு இருந்தன.
 
இவ் திருக்கோவில் பிரதேச கொவிட் 19 கட்டுப்பாட்டு பிரதேச செயலணிக் கூட்டத்தில் திருக்கோவில் பிரதேச செயலாளர் ரீ.கஜேந்திரன் உதவிப் பிரதேச செயலாளர் கே.சதிசேகரன் தவிசாளர் இ.வி.கமலராஜன் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பி.மோகனகாந்தன் திருக்கோவில் ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் ஏ.வி.மர்சூத் உதவித் திட்டமிடல் பணிப்பாளர் எம்.அனோஜா காஞ்சிரம்குடா மற்றும் சாகாமம் இராணுவ கட்டளை அதிகாரிகள் திருக்கோவில் பொலிஸ் நிலைய பதில் பொலிஸ் உத்தியோகத்தர் சுகாதார திணைக்கள உத்தியோகத்தர்கள் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டு இருந்தனர்.

Related posts