நாட்டில் கொவிட் 19 வைரஸின் மூன்றாவதுஅலையின் தாக்கம் மிகமோசமாக பாதித்துவருகின்றது. இந்நிலையில் எமது கிழக்கு மக்கள் அதையிட்டு பெரிதும் அலட்டிக்கொள்ளாமல் அலட்சியமாக இருந்துவருவது கவலையளிக்கிறது என கிழக்கு மாகாண சுகாதாரசேவைப்பணிப்பாளர் வைத்தியகலாநிதி டாக்டர் அழகையா லதாகரன் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்:
தற்போதைய மூன்றாவது அலையின் பாதிப்பு என்பது இனித்தான் வெளிக்காட்டத்தொடங்கும். இவ்வேளையில் நாம் சுகாதார நடைமுறைகளை பேணாமல் அலட்சியமாகஇருப்பதென்பது ஆபத்தாகமுடியும்.
பெரும்பாலானவர்கள் முகக்கவசமின்றி உரிய சுகாதார நடைமுறைகளைப்பின்பற்றாமல் நடந்துவருவதுபற்றி தொடர்ச்சியாக முறைப்பாடு கிடைத்துவருகின்றது.
அரசாங்கத்தின் கொவிட்19தொடர்பான வர்த்தமானி அறிவித்தலில் என்ன சொல்லப்பட்டிருக்கிறதென்பதனை சற்று அனைவரும் பார்க்கவேண்டும். அதன்படி எம்மால் சட்டநடவடிக்கை எடுக்கமுடியும்.
எனவே நிலைமை மோசமாகிக்கொண்டு வருகிறது என்பது மட்டும் உண்மை. எனவே தானும் சமுகமும் பாதுகாக்கப்படவேண்டுமானால் சுகாதார நடைமுறைகளை அலட்சியம் செய்யாமல் பின்பற்றுமாறு தயவாகக்கேட்டுக் கொள்கிறேன்