வரலாற்றுப் பிரசித்தி பெற்ற சம்மாந்துறை கோரக்கோயில் அகோர மாரியம்மன் ஆலய வருடாந்த சடங்கும், தீமிதிப்பு வைபவமும் இன்று (3) ஞாயிற்றுக்கிழமை கடல் நீர் எடுத்து வந்து ,கதவு திறத்தலோடு ஆரம்பமாகியது .
இந்த சடங்கு, தொடர்ந்து 10 நாட்கள் நடைபெற்று 13ஆம் தேதி புதன்கிழமை அதிகாலை தீமிதிப்பு இடம்பெறும் .
ஆலய தலைமைப் பூசகர், மாரியின் மைந்தன் மு.ஜெகநாதன் தலைமையில் கிரியைகள் ஆரம்பமாகின.
நாளை திங்கட்கிழமை காலை ஸ்ரீ பத்ரகாளியம்மன் ஆலயத்தில் இருந்து உபயகாரர் தவிசாளர் கி.ஜெயசிறில் பங்கேற்புடன் பால்குடபவனி இடம்பெறும் .
ஆறாம் தேதி புதன்கிழமை அம்மன் வீதி உலா வருதல் நிகழ்வும் தொடர்ந்து 11-ஆம் தேதி திங்கட்கிழமை வெளிவீதி ஊர்வலமும் இடம்பெற்று 13 ஆம் தேதி புதன்கிழமை காலை 8 மணி அளவில் மஞ்சள் குளித்து தீ மிதித்தல் இடம் பெறும் என்று ஆலய பரிபாலன சபை தலைவர் ம. பாலசுப்ரமணியம் தெரிவித்தார்.