கிழக்குமாகாண ஆசிரியர்களின் சம்மந்தமின்றி கொரோனா கோவிட்- 19 நிதிக்காக வலுக்கட்டாயமாக வெட்டப்பட்ட சம்பளத்தெகை ஆசிரியர்களுக்கு கையளிப்பு
இலங்கை ஆசிரியர் சங்கம்
கிழக்குமாகாணத்திலுள்ள ஆசிரியர்களின் சம்பளத்தில் குறிப்பிட்ட தொகையை கொரோனா கோவிட் – 19 நிதிக்காக வலுக்கட்டாயமாக கடந்த மே மாதத்தில் பிடித்தமையை ஆட்சேபித்து உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனுவென்றை இலங்கை ஆசிரியர் சங்கம் தாக்கல் செய்ததையிட்டு யூலை மாதத்தில் வெட்டப்பட்;ட தெகை கையளிப்பு செய்யப்பட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்டச் செயலாளர் பொன்னுத்துரை உதயரூபன் ஊடகத்துக்கு அனுப்பியுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை ஆசிரியர் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்டச் செயலாளர் பொன்னுத்துரை உதயரூபன் தனது மே மாத சம்பளத்தில் ரூ. 1,174.82 ஐ மட்டக்களப்பு கல்வி வலயம் சம்மதமின்றி வலுக்கட்டாயமாக பிடித்துவைத்துள்ளமையை ஆட்சேபித்து தனது அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாக உயர்நீதிமண்றத்தில் கடந்த யூன் 29ம் திகதி மனு ஒன்றை இலங்கை ஆசிரியர் சங்கத்தின் ஊடாக தாக்கல் செய்துள்ளார். மேலும் மனுதாரர்களாக பொதுச்செயலாளர் திரு. ஜோசப் ஸ்டாலின் மற்றும் தலைவர் திரு. பிரியந்த பெர்னாடோ ஆகியோர் குறிப்பிடப்பட்டுள்ளனர். இவ் அடிப்படை உரிமை மீறலின் பிரதிவாதிகளாக மாகாணக்கல்விப்பணிப்பாளர், மாகாணக்கல்விச்செயலாளர், மாகாண பிரதம செயலாளர், மாகாண ஆளுனர் ஆகியோர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
இலங்கை ஆசிரியர் சங்கம் மனித உரிமை ஆணைக்குழு தலைமைக்காரியாலயம், பிரதேச காரியாலயங்களிலும் தமது முறைப்பாட்டினை பதிவு செய்;;ததனையிட்டு நாட்டிலுள்ள சகல அமைச்சுக்களின் செயலாளர்களுக்கும் மனித உரிமைகள் ஆணையகம் எழுத்து மூலமாக வலுக்கட்டாயமாக சம்பளத்தை குறைக்க முடியாது என்று அறிவுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மட்டக்களப்பு கல்வி வலயத்தில் உள்ள பல பாடசாலைகளின் ஆசிரியர்கள் சம்பள பட்டியலுக்கு வலயத்துக்கு வந்து கையொப்பமிடுமாறும் அவ்வாறு தவறின் யூலை மாதச்சம்பளம் நிறுத்தப்படும் என அச்சுறுத்தலுக்கு உள்ளாகியதை வன்மையாக கண்டிப்பதாக அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு;ள்ள அடிப்படை உரிமை மீறல் மனுத்தாக்கல் தெடர்பான விவாதம் எதிர்வரும் நவம்பர் மாதம் எடுத்துக்கொள்ளப்பட உள்ளதாக தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.