இன்று தமிழ்மக்கள் இக்கட்டான சூழ்நிலையிலுள்ளனர். எனவே தமக்குள் உள்ள கசப்புணர்வுகளை மறந்து இனவிடுதலைக்காக அரசியல்தீர்வுக்காக வீட்டுக்கு வாக்களிக்கவேண்டும்.
இவ்வாறு அம்பாறை மாவட்ட இ.த.அரசுக்ககட்சியின் வேட்பாளர்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் மத்தியில் உரையாற்றிய இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.
இக் கூட்டம் நேற்றுமுன்தினம் மாலை காரைதீவு பொதுநூலக மண்டபத்தில் நடைபெற்றது.
கூட்டத்தில் கட்சியின் செயலாளர் கி.துரைராஜசிங்கம் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் தவிசாளர்களான கி.ஜெயசிறில் (காரைதீவு) த.கலையரசன்(நாவிதன்வெளி) முன்னாள்மாகாணசபை உறுப்பினர் மு.இராஜேஸ்வரன் ஆகியோரும் சமுகமளித்திருந்தனர்.
அவர்மேலும் உரையாற்றுகையில்;:
கடந்தகாலங்களில் எமது தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு எவ்வாறு பயணித்துவந்தது என்பதுபற்றி அறிவீர்கள். இங்கு பெயர்தந்த இளம் வேட்பாளர்களும் இருக்கிறீர்கள். உங்களுக்கு கட்சியின்பாரம்பரியம் நடைமுறை பண்பாடு பற்றி அறிந்திருக்கவேண்டும்.
உண்மையாகச்சொன்னால் இன்னும் யார்யார் வேட்பாளர்கள் என்று இன்னும் உத்தியோகபூர்வமாகஅறிவிக்கவில்லை .
அதற்குள் சமுகவலைத்தளங்கள் பல வேட்பாளர்களை போட்டுள்ளது.அதுமட்டுமல்லசில பெண்மணிகளை வைத்து பாரியவிமர்சனம் செய்துள்ளன. அவர்களது சொந்த வாழ்க்கையை சந்திக்கு இழுத்துள்ளன.
இங்கு அம்பாறைக்கு தேசியபட்டியல் வேண்டும் எனகோரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது. அதையிட்டுஎமதுபொதுக்கூட்டத்தில் பரிசீலிப்போம்.
கடந்தகாலங்களில் மாறிமாறிவந்த அரசாங்கங்கள் தமிழ்மக்களை ஏமாற்றிவந்துள்ளன. நாம் சிலகட்டங்களில் அரசுக்கு சாதமாகஇயங்கி எமது மக்களுக்காக பலவேலைத்திட்டங்களை முன்னெடுத்தோம். இன்னும் பல கோடிருபாக்கள் ஒதுக்கப்பட்டிருந்தும் அரசியல் தளம்பலால் அது கைகூடவில்லை.
போராளிகளுக்கு தொழில் வழங்கலை ஊக்குவிக்க 1300மில்லியன்ருபா ஒதுக்கப்பட்டிருந்தது. போரினால் பாதிக்கப்பட்ட குடும்ப பொருளாதாரத்தை மேம்படுத்தவென 2750மில்லியன்ருபா ஒதுக்கப்பட்டிருந்தது. இறுதிநேரத்தில் அவை அரசியல்மாற்றத்தால் குழம்பியது.
வடக்கு கிழக்கு நல்லிணக்ககுழுவில் 23பாராளுமன்ற உறுப்பினர்களிருந்தனர். அதில்நான் தலைவராக இருந்தேன்.பலவற்றைச்செய்யலாமென் றிருந்தோம். அனைத்தும் குழம்பின.
நாம் அமைச்சரவையில் பங்கேற்பதில்லை.கடந்த கால வரலாறு அதற்கு சான்று பகரும்.எமதுஇனத்திற்கானஅரசியல் தீர்வு எட்டப்படவேண்டும். இனவிடுதலையே முக்கியம். அதேவேளை அபிவிருத்தியையும் முன்கொண்டுசெல்லவேண்டும்.
தமிழ்மக்கள் வீட்டுச்சின்னத்திற்கு வாக்களிக்க முதலில் நீங்கள் ஊக்குவிக்கவேண்டும். அதற்காக உழைக்கவேண்டும்.பின்னர்தான் விருப்புவாக்கு பற்றி சிந்திக்கவேண்டும். கடந்தகாலத்தில் தென்னிலங்கையில் விருப்புவாக்கிற்காக கொலைகூட நடந்திருக்கிறது. எனவே சக வேட்பாளர்கள் விட்டுக்கொடுப்புடன்செயற்படவேண் டும்.
கட்சிக்குஅபகீர்த்தியை ஏற்படும் வண்ணம் செயற்படக்கூடாது.
நாம்பிரதானதமிழரசுக்கட்சியினர். மேலும் ரெலோ புளொட் ஆகிய இருகட்சிகளுள்ளன.அவர்களையும்இணை த்து வேட்பாளர் தெரிவு இடம்பெறும்.அதற்கிடையில் யாரும் முட்டிமோதவேண்டாம்.
எமது தலைமை நான் உட்பட பலரும் இம்முறை தேர்தலில் போட்யிடுவதில்லை என்றுதான் முடிவெடுத்தோம். ஆனால் மக்களினது வேண்டுகோள்களை நாம் உதாசீனம் செய்யமுடியாத துர்ப்பாக்கியநிலையிலுள்ளோம்.
ஆதலால்நாம் மட்டுமல்லஅனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் தேர்தலில் நிற்பது என முடிவெடுத்தோம்.
எமது ஏனைய மாற்றுக்கட்சிகளையிட்டு நாம்அலட்டிக்கொள்ளவேண்டியதில்லை .
புதிதுபுதிதாக கட்சிகளையும்சின்னங்களையும் உருவாக்கிக்கொண்டு அரசின் நிகழ்ச்சிநிரலுக்கமைவாக செயற்படுவதற்கு துணைபோகின்றனர்.
அவர்களின்பின்புலத்தில் யார் நிற்கிறார்கள் என்பதை எமதுதமிழ்மக்கள் படித்தவர்கள்.அவர்கள் நல்லதுகெட்டதைஅறிவார்கள்.
அரசின் பின்புலத்தில் தமிழ்மக்களைபிளவுபடுத்தி அரசுக்கு கொஞ்ச வாக்ககளை பெற்றுக்கொடுப்பதே அவர்களதுநோக்கம். அவர்களைமக்கள் நிராகரிப்பார்கள்.
தமிழ்த்தேசியத்;துடன் எமதுதமிழ்மக்கள் உள்ளனர் என்பதையிட்டுபெருமையடையவேண்டும் .
எனவே அம்பாறை மாவட்ட வேட்பாளர்கள் பொதுமக்கள் கடந்தகால கசப்புணர்வுகளை மறந்து பொறாமைகளைத்தவிர்த்து பிளவுகளைபேதங்களை மறந்த ஒரே குடையின்கீழ்அதாவது இனவிடுதலையை மையமாகவைத்துஒற்றுமையாக செயற்படவேண்டும்.
உண்மையில்நீங்கள் ஸ்திரமாக வேலைசெய்தால் இரண்டு பாராளுமனற் உறுப்பினர்களைக்கூடபெற வாய்ப்புண்டு என்பதை மறந்துவிடக்கூடாது. எது எப்படியிருந்தாலும் தமிழ்மக்களுக்கான பிரதிநிதி கட்டாயம் எமது வீட்டுச்சின்னத்திலிருந்துதான் தெரிவாவார்என்பதில் மாற்றுக்கருத்திற்கிடமில்லை.
70வருடகாலமாக தந்தைசெல்வா கட்டிக்காத்துவந்த கொள்கைகளும் கோட்பாடுகளும் இன்றும் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன. அந்த வழியில் வந்தவரே சம்பந்தன் ஜயா. அவர் கிழக்குமண்ணின் பிரதிநிதி.எமதுமக்கள் பாராளுமன்றம் மட்டுமல்ல மாகாணசபைத்தேர்தலிலும் எமக்கு கூடுதலான ஆசனங்களைப்பெற்றுத்தந்தவர்கள். அது தொடரும் என்பது எமது பரிபூரண நம்பிக்கை. என்றார்.