திருகோணமலை மாவட்டம் பூராவும், இன்று சனிக்கிழமையும் (16) ஞாயிற்றுக்கிழமையும் (17) மின்சாரம் தடைப்படுமென, இலங்கை மின்சார சபையின் திருகோணமலை மாவட்ட பிரதான பொறியியலாளர் காரியாலயம் அறிவித்துள்ளது.
பிரதான மின் இணைப்பில் பராமரிப்பு வேலைகள் மேற்கொள்ளவுள்ளதால், குறித்த இரு தினங்களிலும் காலை 7 மணி முதல் பிற்பகல் 5 மணி வரை, மின்சாரம் தடைப்படுமென, அறிவிக்கப்பட்டுள்ளது.