சர்வதேச அன்னையர் தினம்.

உலகெங்கும்  வாழும் மக்கள் மே 10 ம் திகதி  அன்னையர் தினத்தை கொண்டாடப்படுகின்றனர்.தாய் அன்பிற்கு நிகரானது உலகில் எதுவுமில்லை இதைத்தான் நம் முன்னோர்கள் மாதா,பிதா,குரு,தெய்வம் என்று தாயை முதன்மைப்படுத்தி கூறியுள்ளனர்.
 
யாரெல்லாம் தம்மை பெற்ற தாய், தந்தையரை மதித்து அவர்களுக்கான பணிவிடைகளை செய்து வருகின்றார்களோ அவர்கள் வாழ்க்கையில் உயர்ந்த இலட்சியத்தை அடைகின்றனர்.இது நூறுவீதம் உண்மை.
 
நீங்கள் உங்கள் தாயை பார்க்கும் பொழுது, உலகிலேயே உள்ள தூய்மையான நேசத்தையும் அன்பையும் பார்க்கிறீர்கள் எனச் “சார்லி பென்னடோ௧”கூறுகிறார்.
அவர் கூறிய வார்த்தைகளில் அவ்வளவு உண்மை அடங்கி இருக்கிறது. இவ்வுலகில் நாம் எந்த ஒரு காலக் கட்டத்திலும் சரி எத்தனை மனிதர்களைச் சந்தித்து இருந்தாலும் சரி நம் தாய் அளவிற்கு நம்மை யாரும் நேசித்திருக்க முடியாது.
 
அதாவது எவ்வாறான நேசம் என்றால், நம்மிடம் திரும்பி எந்த ஒரு கைமாறையும் எதிர்பார்க்காமல் வாழ்நாள் வரை பொழிந்து கொண்டிருக்கும் நேசம் ஆகும்.
 
நாம் யார் யாரிடமோ நாம் அவர்களை நேசிக்கிறோம் எனக் கூறுகிறோம். ஆனால், ஒரு முறையாவது நம் தாயிடம் அவளை நேசிப்பதாகக் கூறி இருக்கிறோமா.
அந்த வார்த்தைகளைத் தவிர அவளுக்கு மகிழ்ச்சி அளிப்பது வேறு எதுவாகவும் இருக்க முடியாது.
 
‘‘எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே
அது நல்லவராவதும் தீயவராவதும் அன்னை வளர்ப்பினிலே’‘
வளர்ப்பு என்பதில் கூடத் தந்தையின் வளர்ப்பை அவர்கள் குறிப்பிடவில்லை. தாயின் வளர்ப்பையே குறிக்கிறார்கள்.
ஏனென்றால் பிறப்பின் பின் அக்குழந்தைக்கு விவரம் தெரியும் வரை தாயிடமே இருக்கின்றது. தாயைப் பார்த்துதான் உலகத்தைக் கற்றுக் கொள்கிறது. தாயைப் போலத் தான் இருக்க வேண்டும் என்று நினைக்கின்றது.
 
ஆனால் குழந்தை எவ்வாறான மனிதன் ஆகப் போகின்றான் என்பதையே தாய் தான் தீர்மானிக்க வேண்டும்.
 
புரிதலும் தாயிடம் தான் அதிகமாக நடைபெறுகின்றது.
தன் மகன் அல்லது மகள் என்ன நினைக்கிறார்கள் என்பதைத் தாயால் புரிந்து கொள்ள முடியும். அதேபோல நமக்குப் பிடித்தவை பிடிக்காதவை உடம்பிற்குத் தீங்கு விளைவிப்பவை என அனைத்தையும் தாய் அறிவாள்.
நம்மைப் பாதுகாக்க வேண்டும் என்றே தாய் முதலில் நினைப்பாள்.
நாம் மழையில் சொட்டச் சொட்ட நனைந்து வீடு திரும்பும்பொழுது, வாசலிலேயே துண்டுடன் நின்று,
‘‘அப்பவே குடை எடுத்துட்டுப் போகச் சொன்னேன், கேட்டியா’‘ எனத் திட்டுவதும் தாய்தான்.
 
நமக்கு அடிபடும் பொழுது நம்மைவிட வலியால் அதிகம் துடிக்கும் ஒரே நபரும் நம் தாயாகத் தான் இருக்க முடியும்.
 
வாழ்வில் எந்த ஒரு சூழலிலும் நாம் நினைவுபடுத்திக் கொள்ள வேண்டியதெல்லாம் ஒன்றுதான். அன்று நம் பெற்றோர்கள் இல்லையென்றால் இன்று நாம் இல்லை. அவர்கள் தான் நமக்கு உயிர் அளித்த தெய்வங்கள். அவர்களை நாம் என்றுமே மறக்கவோ உதாசினப் படுத்திவிடவோ கூடாது. ‘‘
அதிலும் தாய் ஆனவள் ஒருபடி மேல் தான். தன் உடலில் பாதி மட்டும் அளிக்காமல், அவளது உயிர் அன்பு வாழும் காலம் அனைத்தையும் நமக்காக அளிக்கும் அவளை நாம் தெய்வமாகவே எண்ண வேண்டும்.
 
என்றுமே தாய் ஆனவள் நம் உடலில் ஓர் அங்கம்தான். நமக்குள்ளும் ஒருவராகவே அவளை நினைக்க வேண்டும். தினமும் நினைக்க வேண்டும்.

Related posts