கிழக்கு வாழ் மக்களின் வாழ்க்கை முறை மற்றும் நட்புறவு ரீதியிலான அனுபங்களை பகிர்ந்து கொள்ளும் முகமாக தென்பகுதியான இரத்தினபுரியைச் சேர்ந்த பௌத்த,கிறிஸ்த்தவ சர்வமத மக்கள் குழுவொன்று மட்டக்களப்பிற்கு விஜயமொன்றினை மேற்கொண்டிருந்தனர்.
இக் குழுவானது இன்று வெள்ளிக்கிழமை மாலை வாழைச்சேனை புனித திரேசாள் ஆலயத்தில் பிரதேச சர்வ மதகுழுவுடன் விசேட கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டிருந்தனர்.
வாழைச்சேனை ஓட்டமாவடி சர்வமத குழுத் தலைவர் அ.வசந்தகுமாரின் தலைமையில் நடைபெற்ற மேற்படி நிகழ்வில் சர்வமதத் தலைவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களும் பங்குபற்றியிருந்தனர்.
இதன்போது வாழைச்சேனை புனித திரேசாள் ஆலய அருட்தந்தை பி.சுகந்தன்,மட்டக்களப்பு இந்து குருமார் பேரவை அங்கத்தவர் ராகுல் நாயுடு, வாழைச்சேனை சர்வமத குழு செயலாளர் ஏ.எல். மீராசாகிபு ஆகியோர்கள் ஆசியுரையாற்றினார்கள்.
மேற்படி நிகழ்வை மட்டக்களப்பு கரித்தாஸ் எகெட் நிறுவனமும் இரத்தினபுரி கரித்தாஸ் செட் மினி நிறுவனமும் இணைந்து ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.